டீசல் டிசையர் விலையை ரூ.12,000 வரை உயர்த்திய மாருதி

கடந்த பிப்ரவரி மாதம் 4 மீட்டருக்கும் குறைவான நீளம் கொண்ட புதிய டிசையர் காரை மாருதி அறிமுகம் செய்தது. வெறும் ரூ.4.79 லட்சம் என்ற நம்ப முடியாத விலையில் புதிய டிசையரை மாருதி விற்பனைக்கு கொண்டு வந்து மார்க்கெட்டில் சலசலப்பை ஏற்படுத்தியது.
மேலும், புதிய டிசையர் விற்பனையில் சக்கை போடு போட்டு வருகிறது. இந்த நிலையில், கடந்த பட்ஜெட்டில் கார்கள் மீதான கலால் வரி உயர்த்தப்பட்டதையடுத்து, கார்களின் விலையை மாருதி உயர்த்தியது. இதில் டிசையரும் அடக்கம்.
இந்த நிலையில், டிசையர் காரின் விலையை மீண்டும் உயர்த்தியுள்ளது மாருதி. இந்த முறை டீசல் டிசையர் காரின் விலையை மாருதி ரூ.8,000 முதல் ரூ.12,000 வரை உயர்த்தியுள்ளது மாருதி.
இதனால், புதிய டிசையரின் டீசல் மாடலை புக்கிங் செய்த வாடிக்கையாளர்கள் கூடுதல் சுமையை சுமக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. மாருதி டிசையர் டீசல் மாடல் ரூ.5.80 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையில் விற்பனை செய்யப்படுகிறது.


Click it and Unblock the Notifications








