மானேசர் ஆலைக்கு புதிதாக 1000 தொழிலாளர்களை நியமிக்கும் மாருதி!

கடந்த இரு வாரங்களுக்கு முன் மானேசரில் உள்ள மாருதி கார் ஆலையை சேர்ந்த தொழிலாளர்கள் பயங்கர வன்முறையில் ஈடுபட்டனர். இதில், பொதுமேலாளர் ஒருவர் பலியானார். அதிகாரிகள் உள்பட 90 பேர் காயமடைந்தனர்.
வன்முறையில் ஈடுபட்ட 100 தொழிலாளர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த நிலையில், வன்முறையில் ஈடுபட்டதாக கருதப்படும் 600 நிரந்தர தொழிலாளர்களை வீட்டுக்கு அனுப்ப மாருதி முடிவு செய்துள்ளது.
இவர்களுக்கு மாற்றாக புதிதாக 1000 தொழிலாளர்களை மானேசர் ஆலையில் சேர்க்க உள்ளது மாருதி. குர்கான் ஆலையில் இருந்தும் தொழிலாளர்களை மானேசர் ஆலைக்கு எடுப்பதற்கும் மாருதி முடிவு செய்துள்ளது. மேலும், பயிற்சி பணியாளர்களை அதிக அளவில் எடுத்து அவர்களுக்கு பயிற்சி அளிக்கவும் அந்த நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
இதன்மூலம், மானேசர் ஆலையின் உற்பத்தி பிரிவுகள் பெரும் மாற்றம் காண உள்ளது. கூடிய விரைவில் புதிய தொழிலாளர்கள் வைத்து உற்பத்தியை துவங்கும் முயற்சிகளை அந்த நிறுவனம் தீவிரப்படுத்தியுள்ளது. இதன்மூலம், கடந்த இரு வாரங்களாக அடியோடு பாதிக்கப்பட்டிருக்கும் ஸ்விப்ட், டிசையர் கார்களின் உற்பத்தி விரைவில் துவங்குவதற்கான அறிகுறிகள் தென்படுகின்றன.


Click it and Unblock the Notifications








