நடப்பாண்டில் புதிதாக 1900 பணியாளர்களை நியமிக்கும் மாருதி

கார் உற்பத்தியில் முதலிடம் வகிக்கும் மாருதி நிறுவனம் வர்த்தக விரிவாக்கத்திற்காக தனது அனைத்து துறைகளிலும் பணியாளர்களை எண்ணி்ககையை அதிகப்படுத்துகிறது.
இதுகுறித்து மாருதி நிறுவனத்தின் மேலாண்மை பிரிவு தலைமை செயல் அதிகாரி சித்திக் கூறுகையில்," அனைத்து துறைகளிலும் பணியாளர் எணணிக்கை அதிகப்படுத்த உள்ளோம்.
இதற்காக, புதிய பணியாளர் பயிற்சி அகடமி ஒன்றையும் துவங்குகிறோம். இதன்மூலம், மாருதி மட்டுமின்றி, டீலர்கள், சப்ளையர்கள், சுஸுகி குழுமம் ஆகியவை பயிற்சி பெற்ற பணியாளர்களை பெறு முடியும்.
நடப்பு ஆண்டு இறுதிக்குள் 1000 தொழிலாளர்களையும், 900 எஞ்சினியரிங் மற்றும் மேலாண்மை துறை பணியாளர்களையும் நியமிக்க உள்ளோம். இதன்மூலம், சிறப்பான வர்த்தக சேவையை மாருதி வழங்கும்," என்றார்.


Click it and Unblock the Notifications








