யூஸ்டு கார் மார்க்கெட்டிலும் ஆதிக்கம் செலுத்தும் மாருதி, ஹூண்டாய்

புதிய கார் மார்க்கெட்டுக்கு சரிசமமாக யூஸ்டு கார் மார்க்கெட்டும் வேகமாக வளர்ந்து வருகிறது. சமீபத்தில் வெளியான புள்ளிவிபரங்களில், நாட்டில் 100 புதிய கார்கள் விற்பனையானால், 130 யூஸ்டு கார்கள் விற்பனையாகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கு பல்வேறு காரணங்களை ஆட்டோமொபைல் வல்லுனர்கள் கூறுகின்றனர். ஓர் ஆண்டு ஓடிய கார் ரூ.50,000 முதல் ரூ.1 லட்சம் வரை குறைவான விலையில் கிடைப்பதால், யூஸ்டு கார் மார்க்கெட் மீது வாடிக்கையாளர்களு்ககு பெரும் ஈர்ப்பு இருக்கிறது.
மேலும், அதிகரித்து வரும் வட்டி வீதங்களும் யூஸ்டு கார் மார்க்கெட் பக்கம் வாடிக்கையாளர்களின் கவனம் திசை திரும்பியுள்ளது. இதனால், தங்களது கையில் இருக்கும் பணத்திற்கு தக்கவாறு தேர்வு செய்ய முடியும் என்பதும் முக்கிய காரணம்.
மேலும், கார் டிரைவிங் தெரியாத பலர் முதலாவதாக யூஸ்டு கார் வாங்கி நன்கு பயிற்சி பெற்ற பின்னர் புதிய காருக்கு மாற திட்டமிடுதலும் முக்கிய காரணமாக கூறப்படுகிறது. இதனால், யூஸ்டு கார் மார்க்கெட் அதீத வளர்ச்சி கண்டு வருவதால், கார் உற்பத்தியில் ஈடுபட்டுள்ள பல முன்னணி நிறுவனங்கள் யூஸ்டு கார்களை வாங்கி விற்கும் தொழிலிலும் ஈடுபட்டு வருகின்றன.
மாருதி, ஹூண்டாய், டொயோட்டோ, மஹிந்திரா என பெரும்பாலான முன்னணி நிறுவனங்கள் யூஸ்டு கார் மார்க்கெட் வர்த்தகத்திலும் ஈடுபட்டுள்ளன. இந்த நிலையில், யூஸ்டு கார் மார்க்கெட்டிலும்ம் மாருதி நிறுவனத்தின் ஆதிக்கம்தான் மேலோங்கி இருக்கிறது.
இதற்கடுத்து, ஹூண்டாய் நிறுவனத்தின் ஆதிக்கம் செலுத்தி வருகிறது. இதற்கு இரண்டு நிறுவனங்களும் மக்களிடத்தில் பிரபலமாகி இந்திய மக்கள் மத்தியில் இரண்டற கலந்துவிட்டதை முக்கிய காரணமாக கூறலாம்.
மேலும், அதிக மைலேஜ், குறைந்த விலை, பரந்து விரிந்த சர்வீஸ் நெட்வொர்க் வசதிகளும் இந்த இரு நிறுவனங்களின் ஆதிக்கத்திற்கு முக்கிய காரணமாக இருக்கின்றன.


Click it and Unblock the Notifications








