ரூ.4,000 கோடியில் புதிய கார் ஆலை: குஜராத் அரசுடன் மாருதி ஒப்பந்தம்

Maruti Car
குஜராத்தில் ரூ.4,000 கோடி முதலீட்டில் புதிய கார் தொழிற்சாலையை கட்டுவதற்காக, அம்மாநில அரசுடன் மாருதி நிறுவனம் செய்து கொண்டுள்ளது.

நாட்டின் கார் உற்பத்தியில் முதலிடம் வகிக்கும் மாருதி நிறுவனம் டெல்லி அருகே குர்கான் மற்றும் மானேசர் ஆகிய இடங்களில் ஆலைகளை அமைத்து கார் உற்பத்தி செய்து வருகிறது.

எதிர்கால தேவையை கருத்தில்க்கொண்டும், ஏற்றுமதியை அதிகரிக்கும் வகையிலும் குஜராத்தில் புதிய கார் ஆலையை கட்ட மாருதி முடிவு செய்தது. இதற்காக, குஜராத் அரசுடன் பல கட்ட பேச்சுவார்த்தைகளை மாருதி மேற்கொண்டது.

இதில், சுமூக உடன்பாடு எட்டப்பட்டதால், குஜராத் அரசுக்கும் மாருதி நிறுவனத்துக்கும் இடையே தற்போது ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. அகமதாபாத்திலிருந்து 100கிமீ தொலைவில் உள்ள ஹன்சால்பூர் என்ற இடத்தில் புதிய கார் ஆலை அமைக்க இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

700 ஏக்கரில் அமைய இருக்கும் இந்த பிரம்மாண்ட தொழிற்சாலைக்காக ரூ.4,000 கோடியை முதலீடு செய்ய மாருதி திட்டமிட்டுள்ளது. ஆண்டுக்கு 2.5 லட்சம் கார்களை உற்பத்தி செய்யும் திறன் கொண்டதாக இந்த ஆலை இருக்கும்.

Article Published On: Monday, June 4, 2012, 14:26 [IST]
English summary
Country's largest car maker Maruti suzuki has inked the MOU with the government of Gujarat and will be setting up a new manufacturing plant with the capacity of 2.5 lakh cars annually located at Hansalpur in the northern Gujarat.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+