ஒரு கோடி கார் விற்பனை: ஸ்பெஷல் எடிசன் மாருதி எஸ்எக்ஸ்-4 அறிமுகம்

Maruti SX4
ஒரு கோடி கார்களை விற்பனை செய்துள்ள சாதனை நிகழ்வை கொண்டாடும் விதமாக செலிபரேஷன் எடிசன் எஸ்எக்ஸ்-4 செடான் காரை மாருதி அறிமுகம் செய்துள்ளது.

நாட்டின் கார் உற்பத்தியில் முதலிடம் வகிக்கும் மாருதி நிறுவனம், சமீபத்தில் ஒரு கோடி கார் விற்பனை என்ற புதிய மைல்கல்லை எட்டியது. மேலும், ஒரு கோடி எண்ணிக்கையில் உற்பத்தி செய்ய்பபட்ட ஸ்விப்ட் காரை கோயம்புத்தூரில் விற்பனைக்கு அனுப்பியது மாருதி.

இதனிடையே, கார் விற்பனையில் ஒரு கோடியை எட்டிய வரலாற்று சாதனையை கொண்டாடும் விதமாக புதிய செலிபரேஷன் எடிசன் எஸ்எக்ஸ்-4 செடான் காரை மாருதி அறிமுகம் செய்துள்ளது.

பேப்ரிக் இருக்கைகள், க்ரோம் பூச்சு கொண்ட கதவு கைப்பிடிகள், க்ரோம் ஏசி வென்ட்டுகள், செலிபரேஷன் எடிசனை காட்டும் வகையில் ஆர்ம் ரெஸ்ட்டில் ஓவியங்கள், தலையனைகள், வெளிப்புறத்தில் செலிபரேஷன் எடிசன் பேட்சுடன் புதிய கிராபிக் டிசைன் உள்ளிட்ட ஏராளமான புதிய அம்சங்களுடன் புதிய எஸ்எக்ஸ்-4 அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

புதிய செலிபரேஷன் எடிசன் எஸ்எக்ஸ்-4 கார் நிச்சயம் வாடிக்கையாளர்களை பெரிதும் கவரும் என்று மாருதி தெரிவித்துள்ளது. எஸ்எக்ஸ்-4 செடான் கார் பெட்ரோல், டீசல் மட்டுமின்றி இயற்கை எரிவாயுவில் இயங்கும் மாடலிலும் கிடைக்கிறது.

எஸ்எக்ஸ்-4 பெட்ரோல் மாடலில் 104 பிஎச்பி ஆற்றலை வெளிப்படுத்தும் 1.6 லிட்டர் எஞ்சினும், டீசல் மாடலில் 90 பிஎச்பி ஆற்றலை வெளிப்படுத்தும் 1.3 லிட்டர் மல்டிஜெட் டீசல் எஞ்சினும், சிஎன்ஜி மாடலில் 86 பிஎச்பி ஆற்றலை வெளிப்படுத்தும் 1.6 லிட்டர் எஞ்சினும் பொருத்தப்பட்டிருக்கிறது.

More from DriveSpark

Article Published On: Tuesday, February 14, 2012, 16:10 [IST]
English summary
Maruti has introduced special edition SX4 mid size sedan to celebrate the one crore car sales achievement. The celebration edition sx4 comes with fabric seats,new fabric seat, chrome inside door handles and chrome AC vents. cubic printing on arm rest, Celebration floor mats and pillows and Celebration Edition body decals and graphics, are a few more of the additional features present in the car.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+