அக்டோபர் 16ந் தேதி மாருதியின் புதிய ஆல்ட்டோ அறிமுகம்!

அக்டோபர் 16ந் தேதி புதிய ஆல்ட்டோ 800 காரை மாருதி அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த ஆண்டில் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்திய கார் மாடலாக மாருதியின் புதிய ஆல்ட்டோ 800 இருக்கிறது. குறைந்த நிலை நிறைந்த அம்சங்களுடன் வர இருப்பதாக வெளியாகி இருக்கும் தகவல்களால் வாடிக்கையாளர் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது.

Alto 800
மானேசர் ஆலையில் உற்பத்தி பாதிப்பு காரணமாக ஆல்ட்டோ 800 காரின் அறிமுகம் குறித்து இதுவரை எந்தவொரு திடமான தகவலையும் மாருதி வெளியிடாமல் இருந்து வருகிறது.

ஆனால், பண்டிகை கால விற்பனையில் பங்களிப்பை பெறுவதற்கு புதிய ஆல்ட்டோ 800 காரை இறக்குவதே மாருதிக்கு இருக்கும் ஒரே வழி. இந்த மாதமே அறிமுகமாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அடுத்த மாதம் 16ந் தேதி புதிய ஆல்ட்டோ 800 காரை களமிறக்க மாருதி முடிவு செய்துவிட்டதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

ரூ.2 லட்சம் ஆரம்ப விலையில் வரலாம் என்ற தகவலால் கார் வாங்க காத்திருக்கும் பலர் இந்த காரையும் தேர்வு பட்டியலில் வைத்திருக்கின்றனர். எனவே, அக்டோபர் 16ந் தேதி மார்க்கெட்டுக்கு புதிய ஆல்ட்டோ வர இருப்பதாக வெளியாகி இருக்கும் தகவல்கள் அவர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

More from DriveSpark

Article Published On: Monday, September 24, 2012, 10:56 [IST]
English summary
The brand new 2012 Maruti Suzuki Alto 800 could grace the Indian market on 16th October 2012, sources said.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+