7 கார்களுக்கு புதிய ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் பொருத்தும் மாருதி

கார் உற்பத்தியில் முன்னிலை வகிக்கும் மாருதி நிறுவனம் புதிய தொழில்நுட்பங்களை வாடிக்கையாளர்கள் சரியான விலையில் சுவைக்கும் வாய்ப்பை வழங்குவதில் எப்போதுமே ஒருபடி முன்னால் இருந்து வருகிறது.
அந்த வகையில், தற்போது தனது சிறிய கார் மாடல்களில் புதிய ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷனை பொருத்த மாருதி முடிவு செய்துள்ளது. தற்போது ஏ-ஸ்டார், டிசையர், எஸ்எக்ஸ்-4 உள்ளிட்ட கார்கள் ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷனுடன் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், ஆல்ட்டோ, வேகன்-ஆர், எஸ்டீலோ உள்ளிட்ட 7 சிறிய கார் மாடல்களில் இந்த புதிய 4 ஸ்பீட் ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷனை பொருத்தி விற்பனைக்கு கொண்டு வர மாருதி திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் பொருத்தப்படும் மாடல்கள் விலையில் ஒரு லட்சம் வரை கூடுதலாக இருக்கலாம் என்று தகவல்கள் கூறுகின்றன. விலை அதிகம், மைலேஜ் குறைவு என்பதால் ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் கார்களை விரும்பாவிட்டாலும், மெல்ல மெல்ல அதன் விற்பனை அதிகரித்து வருகிறது.
எனவே, தற்போதே தனது அனேக குட்டி கார்களில் இந்த புதிய 4 ஸ்பீட் ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் கொண்ட மாடல்களையும் விற்பனைக்கு கொண்டு வர மாருதி முடிவெடுத்துள்ளதாக தெரிகிறது.


Click it and Unblock the Notifications