புதிய ரிட்ஸ் சோதனை ஓட்டம் தீவிரம்: விரைவில் விற்பனைக்கு வருகிறதா?
கடந்த 2008ம் ஆண்டு ரிட்ஸ் காரை மாருதி விற்பனைக்கு கொண்டு வந்தது. அதுமுதல் இதுவரை அந்த காரில் எந்த மாற்றங்களும் செய்யப்படாமல் விற்பனையாகி வந்தது. இந்த நிலையில், மார்க்கெட்டில் புதிய கார்களின் வரவால் ரிட்ஸ் காரை புதுப்பொலிவுடன் அறிமுகப்படுத்துகிறது மாருதி.
வடிவமைப்பில் பெரிய அளவில் மாற்றங்கள் செய்யப்படாவிட்டாலும், மாறறங்களை உணர்த்தும் வகையில் புதிய கிரில், ஹெட்லைட் வடிவமைப்பு, பானட்டில் சிறிய மாற்றம் என ஆங்காங்கே கை வைத்துள்ளது மாருதி.
பனி விளக்குகள் அமைவிடமும் மாற்றத்தை சந்தித்துள்ளது. இது முற்றிலும் வித்தியாசமான கெட்டப்பை ரிட்ஸ் ஹேட்ச்பேக்குக்கு கொடுக்கும் என்பதில் ஐயமில்லை.
கண்டதும் காதல் கொள்ள செய்யும் வகையில் உட்புறத்திலும் பொலிவை கூட்டியுள்ளது மாருதி. தவிர, சுற்றுப் புற மாசுபடுவதை கட்டுப்படுத்தும் விதத்தில் எஞ்சினை மாருதி ட்யூனிங் செய்துள்ளதாகவும் தகவல்கள் கூறுகின்றன.
ஸ்விப்ட்டில் பொருத்தப்பட்டிருக்கும் அதே 1.2 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் மற்றும் 1.3 லிட்டர் டீசல் எஞ்சினுடன் ரிட்ஸ் வருகிறது. கடந்த ஆண்டு மாருதி ஆலைகளில் நடந்த தொழிலாளர் வேலைநிறுத்தத்தால் ஸ்விப்ட் உற்பத்தி பாதித்தது.
அப்போது, ஸ்விப்ட் இடத்தை ரிட்ஸை வைத்துதான் மாருதி நிரப்பியது. இதனால், ரிட்சின் விற்பனையும் அதிகரித்தத. இந்த நிலையில், புதிய ரிட்ஸை வைத்து ஸ்விப்ட் சுமையை குறைத்துக்கொள்ள முடியும் என மாருதி நம்புகிறது.
எங்களது ஃபேஸ்புக் ஃபேன் பக்கத்தில் பின்தொடர இங்கே கிளிக் செய்யவும்


Click it and Unblock the Notifications









