ரூ.4.79 லட்சத்தில் புதிய டிசையரை அறிமுகப்படுத்தியது மாருதி
என்ட்ரி லெவல் செடான் கார் மார்க்கெட்டில் மாருதியின் ஸ்விப்ட் டிசையர் விற்பனையில் முன்னிலை வகிக்கிறது. இந்த நிலையில், வரிச்சலுகை பெறும் விதத்திலும், குறுகிய சாலைகளில் எளிதாக ஓட்டுவதற்க ஏதுவாகவும் டிசையரின் நீளத்தை குறைத்து புதிய டிசையர் காரை மாருதி வடிவமைத்துள்ளது.
இந்த புதிய கார் 4 மீட்டர் நீளத்துக்கும் குறைவாக வடிவமைக்கப்பட்டுள்ளதால் பழைய ஸ்விப்ட்டை விட குறைவான விலையில் விற்பனைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்பட்டது. எதிர்பார்த்தபடியே, பழைய டிசையரைவிட 23,000 ரூபாய் குறைந்த விலையில் புதிய டிசையர் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
இருப்பினும், 150 கூடுதல் வசதிகளுடன் வந்துள்ள புதிய ஸ்விப்ட் வாடிக்கையாளர்களின் பணத்திற்கு கூடுதல் மதிப்பை கொடுக்கும் என்று கருதலாம்.
ரூ.4.79 லட்சம் முதல் ரூ.6.54 லட்சம் வரையிலான விலையில் புதிய குட்டி டிசையர் விற்பனைக்கு வந்துள்ளது. 1.2 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் மற்றும் 1.3 லிட்டர் டீசல் எஞ்சின் மாடல்களில் புதிய டிசையர் மார்க்கெட்டுக்கு வந்துள்ளது.
இதில், பெட்ரோல் கார் லிட்டருக்கு 19.1 கிமீ மைலேஜையும், டீசல் கார் 23.4 கிமீ மைலேஜையும் கொடுக்கும் என்று மாருதி தெரிவித்துள்ளது. மேலும், பழைய டிசையரைவிட 150 புதிய அம்சங்களுடன் புதிய டிசையர் அறிமுகப்படுத்தியுள்ளது.
புதிய டிசையர் மேனுவல் கியர் பாக்ஸ் மற்றும் ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் மாடல்களில் விற்பனை வரும் புதிய டிசையர் 2 புதிய கலர்கள் உள்பட 7 வண்ணங்களில் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
விலை விபரம்
பெட்ரோல் வேரியண்ட்களின் விலை விபரம்:
எல்எக்ஸ்ஐ: ரூ.4.79 லட்சம்
விஎக்ஸ்ஐ: ரூ.5.32 லட்சம்
இசட்எக்ஸ்ஐ: ரூ.6.54 லட்சம்
ஆட்டோமேட்டிக்: ரூ.6.54 லட்சம்
டீசல் வேரியண்ட்களின் விலை விபரம்:
எல்டிஐ: ரூ.5.80 லட்சம்
விடிஐ: ரூ.6.31 லட்சம்
இசட்டிஐ:ரூ.7.09 லட்சம்
(புதிய ஸ்விப்ட் டிசையர் கேலரிக்கு செல்ல இங்கே கிளிக் செய்யவும்)


Click it and Unblock the Notifications









