சென்னையில் ரூ.6.17 லட்சம் ஆரம்ப விலையில் எர்டிகா அறிமுகம்
சென்னையில் ரூ.6.17 லட்சம் முதல் ரூ.8.78 லட்சம் வரையிலான விலையில் மாருதி எர்டிகா அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
மாருதியின் முதல் எம்பிவி காரான மாருதி எர்டிகா கடந்த வியாழக்கிழமை மும்பையில் நடந்த விழாவில் விற்பனைக்கு முறைப்படி அறிமுகம் செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து, தற்போது எர்டிகாவை சென்னையிலும் விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது மாருதி.

வெளியிலிருந்து பார்ப்பதற்கு எர்டிகா காம்பெக்ட்டாக தெரிகிறது. ஆனால்,உள்பக்கத்தில் தாராள இடவசதியை கொண்டிருக்கிறது. மூன்றாவது வரிசை சராசரி உயர்ம் கொண்டவர்களுக்கு போதுமானதாக இருக்கிறது.
1.4 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் மற்றும் 1.3 லிட்டர் டீசல் எஞ்சின் மாடல்களில் எர்டிகா விற்பனைக்கு வந்துள்ளது.7 வண்ணங்களில் கிடைக்கும் எர்டிகாவின் பெட்ரோல் மாடல் ரூ.6.17 லட்சம் ஆரம்ப விலையிலும், டீசல் மாடல் ரூ.7.61 லட்சம் ஆரம்ப விலையிலும் சென்னையில் விற்பனைக்கு வந்துள்ளது.
எர்டிகாவின் சென்னை எக்ஸ்ஷோரூம் விலை விபரம்,
பெட்ரோல் வேரியன்ட்கள்:
எல்எக்ஸ்ஐ: ரூ.6.17 லட்சம்
விஎக்ஸ்ஐ: ரூ.6.89 லட்சம்
இசட்எக்ஸ்ஐ:ரூ.7.61 லட்சம்
டீசல் வேரியன்ட்கள்:
எல்டிஐ: ரூ.7.61 லட்சம்
விடிஐ: ரூ.8.22 லட்சம்
இசட்டிஐ:ரூ.8.78 லட்சம்


Click it and Unblock the Notifications








