கூடுதல் அம்சங்களுடன் லிமிடேட் எடிசன் வேகன்-ஆர்: மாருதி அறிமுகம்

ப்ரோ என்ற பெயரில் வந்துள்ள இந்த புதிய வேகன்-ஆரில் கிராபிக் டிசைன் கொண்ட ஸ்டிக்கர்கள் வெளிப்புறத்தை அலங்கரிக்கின்றன. ரியர் ஸ்பாய்லர் பொருத்தப்பட்டுள்ளது. முன்பக்கம் மற்றும் பின்பக்கம், பம்பர் புரொடெக்டர் கொண்டிருக்கிறது.
காருக்கான வாசனை திரவியம், வீல் கவர், சைடு மோல்டிங், 16செமீ 4 வே ஸ்பீக்கர்கள், தரை விரிப்பு, இரண்டு வண்ணங்களில் கலக்கலான இருக்கை கவர்கள், யுஎஸ்பி டபிள் டின் மியூசிக் சிஸ்டம் ஆகியவை ஸ்டாண்டர்டு ஆக்சஸெரீஸ்களாக இந்த புதிய வேகன்-ஆருக்கு கொடுக்கப்படுகிறது.
தவிர, லிமிடேட் எடிசன் என்று ஆங்கிலத்தில் எழுதப்பட்ட சிறிய பட்டையும் பொருத்தப்பட்டிருக்கும். இந்த கூடுதல் ஆக்சஸெரீஸ்கள் ரூ.30,000 மதிப்பு கொண்டவை. ஆனால், தள்ளுபடி சலுகையுடன் ரூ.20,000 மட்டுமே கூடுதலான விலையில் இந்த கார் விற்பனை செய்யப்படும் என மாருதி தெரிவித்துள்ளது.


Click it and Unblock the Notifications








