கூடுதல் வசதிகளுடன் லிமிடேட் எடிசன் ஸ்விப்ட்: மாருதி அறிமுகம்
கூடுதல் வசதிகளுடன் லிமிடேட் எடிசன் ஸ்விப்ட் மாடலை மாருதி அறிமுகம் செய்துள்ளது. ஸ்விப்ட் ஆல்பா என்ற பெயரில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள இந்த பெட்ரோல் ஸ்விப்ட், விஎக்ஸ்ஐ வேரியன்ட்டில் மட்டும் கிடைக்கும்.
டீசல் ஸ்விப்ட் கார்களுக்கு மவுசு கூடியிருப்பதால், பெட்ரோல் ஸ்விப்ட்டின் விற்பனை சுணக்கம் கண்டுள்ளதையடுத்து இந்த லிமிடேட் எடிசன் காரை மாருதி விற்பனைக்கு விட்டுள்ளது. வாடிக்கையாளர்களின் கவனத்தை பெட்ரோல் ஸ்விப்ட் மீது திரும்பும் வகையில் கூடுதல் ஆக்சஸெரீஸ்களுடன் இந்த லிமிடேட் எடிசன் வந்துள்ளது.

இன்டீரியர் ஸ்டைல் கிட், ப்ளூடூத், மொபைல்போனுடன் இணைத்துக்கொண்டு பாடல்களை கேட்கும் வசதிகொண்ட மியூசிக் சிஸ்டம், ஸ்பீக்கர் சிஸ்டம், சீட் கவர்கள், டிசைனர் தரைவிரிப்புகள், டோர் வைசர், டோர் சில் கார்டு, மட் பிளாப் மற்றும் ரியர் ஸ்பாய்லர் ஆகிய கூடுதல் அக்சஸெரீஸ்கள் ஸ்விப்ட் ஆல்பாவில் ஸ்டான்டர்டாக இருக்கும்.
அதேவேளை, எவ்வளவு லிமிடேட் எடிசன் ஸ்விப்ட் ஆல்பா கார்களை விற்பனை செய்யப்படும் என்ற விபரங்களை மாருதி தெரிவிக்கவில்லை. எனவே, ஸ்பெஷல் எடிசன் ஸ்விப்ட் ஆல்பா கார்களை வாங்க விரும்பும் வாடிக்கையாளர்கள் உடனடியாக புக்கிங் செய்து கொள்வது நல்லது.


Click it and Unblock the Notifications








