காயமடைந்த அதிகாரிகளிடம் நேரில் 'சாரி' கேட்ட மாருதி சிஇஓ!

கடந்த வாரம் புதன்கிழமை மாருதி ஆலையில் நடந்த வன்முறை சம்பவத்தில் பொதுமேலாளர் ஒருவர் உயிரிழந்தார். 40 க்கும் மேற்பட்ட அதிகாரிகள் உள்பட 90 பேர் காயமடைந்தனர்.
இந்த நிலையில், வன்முறை சம்பவத்தில் காயமடைந்து பல்வேறு மருத்துவமனைகளி்ல் அனுமதிக்கப்பட்டிருக்கும் அதிகாரிகளை மாருதி சிஇஓ சின்ஷோ நகனிஷி நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார். மேலும், நிறுவனத்தின் சார்பில் வருத்தத்தையும் தெரிவித்தார்.
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர்," இரண்டாம் உலகப் போருக்கு பிறகு ஜப்பானில் பல தொழிலாளர் போராட்டங்களை பார்த்திருக்கிறேன். ஆனால், சமீபத்தில் மானேசர் ஆலையில் நடந்தது போன்ற சம்பவத்தை பார்த்ததில்லை," என்று கூறினார்.
மேலும், இதுபோன்ற சம்பவம் ஏற்படுவதற்கு காரணங்கள் என்ன என்பது குறித்து தமக்கு தெரியவில்லை என்று தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications








