அடுத்த ஆண்டு மினி எஸ்யூவியை களமிறக்க மாருதி தீவிரம்
எர்டிகா மூலம் எம்பிவி மார்க்கெட்டில் காலடி எடுத்து வைத்து சலசலப்பை ஏற்படுத்தியுள்ள மாருதி, அடுத்து ஆல்பா மினி எஸ்யூவியை விற்பனைக்கு கொண்டு வருவதற்கான பணிகளை தீவிரப்படுத்தியுள்ளது.
கார் தயாரிப்பில் முதல் இடத்தில் இருக்கும் மாருதி நிறுவனம், சிறிய கார் மார்க்கெட் தவிரவும் எம்பிவி மற்றும் எஸ்யூவி மார்க்கெட் மீதும் கண் பதித்துள்ளது.
கடந்த 12ந் தேதி எர்டிகாவை விற்பனைக்கு கொண்டு வந்து மார்க்கெட்டில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. இதற்கடுத்து, தற்போது புதிய மினி எஸ்யூவியை விற்பனைக்கு கொண்டு வரும் பணிகளை அந்த நிறுவனம் தீவிரம் காட்டி வருகிறது.

கடந்த ஜனவரியில் நடந்த டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் எக்ஸ்ஏ ஆல்பா என்ற குறியீட்டு பெயரில் பார்வைக்கு வைக்கப்பட்டிருந்த கான்செப்ட் மாடல் மினி எஸ்யூவிதான் அது.
இந்த மினி எஸ்யூவியை அடுத்த ஆண்டு விற்பனைக்கு கொண்டு வந்துவிட வேண்டும் என்ற முனைப்புடன் மாருதி செயல்பட்டு வருகிறது. ஆல்பா கான்செப்ட் மாடல் எஸ்யூவியை வர்த்தக ரீதியில் விற்பனை செய்வதற்கான தகவமைப்புகளுடன் தற்போது மாற்றி வருகிறது மாருதி.
இந்த செக்மென்ட்டில் பிரிமியர் ரியோ எஸ்யூவி மட்டும்தான் தற்போது விற்பனையில் உள்ளது. எனவே, பிற போட்டியாளர்களுக்கு முன் இந்த செக்மென்ட்டில் நுழைந்துவிட வேண்டும் என்பதால்தான் ஆல்பா மீதான தீவிரத்திற்கு காரணம்.
5 பேர் பயணம் செய்யும் வசதி கொண்டதாக இருக்கும் இந்த மினி எஸ்யூவி மார்க்கெட்டில் புதிய அத்யாயத்தை எழுதும் என்று மாருதி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


Click it and Unblock the Notifications








