வரும் 15ந் தேதி புதிய 800 காரை அறிமுகப்படுத்துகிறதா மாருதி?

மானேசர் ஆலையில் தொழிலாளர் பிரச்னை காரணமாக புதிய 800 காரின் அறிமுகம் தள்ளிப் போகும் என தெரிவிக்கப்பட்டது. ஆனால், மாருதியின் விற்பனை கடுமையாக சரிந்து வருவதால் அந்த நிறுவனம் பெரும் நெருக்கடியில் இருக்கிறது.
எனவே, புதிய 800 காரை முன்கூட்டியே அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது. இதனிடையே, வரும் 15ந் தேதி புதிய 800 காரை விற்பனைக்கு கொண்டு வர மாருதி திட்டமிட்டுள்ளதாக ஆன்லைனில் தகவல்கள் பரபரக்கின்றன. ஆனால், இதனை மாருதி இதுவரை உறுதிப்படுத்தவில்லை.
புத்தம் புது வடிவமைப்பு, புதிய எஞ்சின் ஆகிய அம்சங்களுடன் புதிய 800 காரை மாருதி விரைவில் அறிமுகப்படுத்த உள்ளது. ரூ.2 லட்சத்தில் இந்த புதிய கார் வர இருப்பதாக தகவல்கள் கூறுவதால் வாடிக்கையாளர் மத்தியிலும், ஆட்டோமொபைல் துறையிலும் பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது.
ஆல்ட்டோ 800 என்ற பெயரில் இந்த புதிய கார் வர இருப்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications








