இணையதளங்களில் கசிந்த மாருதியின் புதிய ஆல்ட்டோ 800 படங்கள்!

மாருதி ஆல்ட்டோ 800
மாருதி நிறுவனம் விரைவில் விற்பனைக்கு கொண்டு வர இருக்கும் ஆல்ட்டோ 800 காரின் படங்கள் வெளியாகி இருக்கின்றன.

சீனாவில் இந்த புகைப்படங்கள் ரகசியமாக படம் பிடிக்கப்பட்டுள்ளன. சீனாவில் விற்பனைக்கு வர இருக்கும் ஆல்ட்டோ 800 காருக்கும் இந்தியாவில் விற்பனைக்கு வர இருக்கும் காருக்கும் வடிவமைப்பில் அதிக வித்தியாசம் இருக்காது என தெரிகிறது.

எனவே, இதுதான் விரைவில் விற்பனைக்கு வர இருக்கும் மாருதியின் புதிய ஆல்ட்டோ 800 கார் என்று நம்பலாம். மேலும், சீனாவில் விற்பனைக்கு வரும் புதிய ஆல்ட்டோ 800 காரில் 67 பிஎச்பி ஆற்றலை வெளிப்படுத்தும் 1.0 லிட்டர் எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கும்.

இநதியாவில் விற்பனைக்கு வர இருக்கும் புதிய ஆல்ட்டோ 800 காரில் 45 பிஎச்பி ஆற்றலை வெளிப்படுத்தும் 800 சிசி எஞ்சினுடன் வருகிறது. படங்களில் புதிய ஆல்ட்டோ 800 காரின் தோற்றம் சற்று ஏ-ஸ்டார் காரை நினைவூட்டினாலும் பல புதிய மாறுதல்களுடன் அசத்தலாக இருக்கிறது.

குறைந்த விலை,அதிக மைலேஜ் உள்ளிட்ட காரணங்களால் புதிய ஆல்ட்டோ 800 காருக்கு ஏராளமான வாடிக்கையாளர்கள் காத்திருக்கின்றனர். இதை கருதி புதிய ஆல்ட்டோ 800 காரை விரைவில் மாருதி விற்பனைக்கு கொண்டு வந்தால் நிச்சயம் விற்பனையில் மாருதிக்கு புதுத் தெம்பை அளிக்கும்.

எங்களது ஃபேஸ்புக் பக்கத்தில் மாருதி ஆல்ட்டோ 800 படங்களை காணலாம்

source: Autohome

Article Published On: Wednesday, August 22, 2012, 13:44 [IST]
English summary
These are first ever clear images of the New Maruti Suzuki Alto / Maruti 800. The images have been spied in China however we expect the similar models to be launched in India this Diwali.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+