மாருதியின் புதிய ஆல்ட்டோ 800 படங்கள்: முதன்முறையாக...!!

மாருதி விரைவில் விற்பனைக்கு கொண்டு வர இருக்கும் புதிய 800சிசி கார் மிகப்பெரிய எதிர்பார்ப்பை மார்க்கெட்டில் ஏற்படுத்தியிருக்கிறது. அதிக மைலேஜ் கொடுக்கும் புதிய 800 சிசி எஞ்சின், குறைந்த விலை, ஏர்பேக் உள்ளிட்ட பாதுகாப்பு அம்சங்களோடு வருவதால் ஏராளமான வாடிக்கையாளர்கள் இந்த காருக்காக காத்துக் கிடக்கின்றனர். ஆனால், இதுவரை இந்த காரின் முழுமையான படங்கள் கிடைக்கவில்லை.

இந்த நிலையில், இந்த புதிய குட்டிக் காரின் படங்கள் டீம் பிஎச்பி தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. டீம் பிஎச்பி தளத்தின் உறுப்பினர் எடுத்த புகைப்படங்கள்தான் அவை. ஸ்லைடரில் அந்த படங்களை காணலாம்.

முகப்பு

முகப்பு

பெரிய ஏர்டேம், குரோம்பூச்சுடன் சிங்கிள் கிரில், சுஸுகியின் லோகோவுடன் கூடிய முகப்பில் ஹெட்லைட் தெறிப்பாக தெரிகிறது. ஆல்டடோவின் முகப்பு நிச்சயம் அதிக கவர்ச்சி கொண்டதாக கூறலாம்.

 பின்புற வடிவமைப்பு

பின்புற வடிவமைப்பு

பின்புற வடிவமைப்பும் அசத்தலாகவே இருக்கிறது. ஹூண்டாய் ஐ20 காரின் டேஞ்சர் விளக்குகளின் வடிவமைப்பை சிறிது நினைவுப்படுத்தினாலும் இது மேல்நோக்கி நீண்டிருப்பதால் வித்தியாசம் தெரிகிறது

உட்புற வடிவமைப்பு:

உட்புற வடிவமைப்பு:

டேஷ்போர்டில் ஏசி வென்ட்டுகள், மேனுவல் கன்ட்ரோல் ஸ்விட்சுகள் ஆகியவை உள்ளன. கியர் லிவருக்கு முன்பகுதியில் மொபைல்போன் உள்ளிட்டவை வைக்கும் அளவுக்கு இடவசதி இருக்கிறது.

பாதுகாப்பு அம்சம்

பாதுகாப்பு அம்சம்

இந்த குட்டிக் கார் ஏர்பேக் வசதியுடன் வருகிறது. ஸ்டீயரிங் வீலில் ஏர்பேக் பொருத்தப்பட்டிருக்கிறது. 3 ஸ்போக் ஸ்டீயரிங் வீலுடன் புதிய ஆல்ட்டோ 800 வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.இதன் டாப் ஸ்பீட் 180கிமீ ஆக இருக்கும்.

சிஎன்ஜி மாடல்

சிஎன்ஜி மாடல்

பெட்ரோல் மட்டுமின்றி, சிஎன்ஜி மாடலிலும் புதிய ஆல்ட்டோ 800 கார் வர இருப்பது உறுதியாகி இருக்கிறது.

Images Source: Team BHP

More from DriveSpark

Article Published On: Monday, September 17, 2012, 11:24 [IST]
English summary
Maruti Suzuki's soon to be launched small car, the Alto 800 has been sighted and here are the images. The Alto 800 will be available with a petrol as well as a CNG engine. The Alto 800 comes with a driver airbag and other interesting features.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+