அடுத்த வாரம் மானேசர் ஆலை திறப்பு: மாருதி அதிகாரி தகவல்

கடந்த மாதம் 21ந் தேதி மாருதியின் மானேசர் ஆலையில் நிகழ்ந்த வன்முறை சம்பவங்களையடுத்து, அந்த ஆலை காலவரையன்றி மூடப்பட்டது. கார் உற்பத்தி முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், மாருதிக்கு நாள் ஒன்றுக்கு 70 கோடி முதல் 90 கோடி வரை இழப்பு ஏற்பட்டு வருகிறது.
வன்முறை பிரச்னைக்கு முழுமையாக தீர்வு கண்டால் மட்டுமே ஆலையை திறப்போம் என ஹரியானா அரசிடம் மாருதி பிடிவாதமாக கூறி விட்டது. வன்முறை சம்பவங்கள் தொடர்பாக மாருதியும் தனியாக விசாரணை நடத்தி வருகிறது.
இந்த நிலையில், மானேசர் ஆலையை வரும் வார துவக்கத்தில் அதாவது, இன்னும் இரு தினங்களில் திறப்பதற்கு முடிவு செய்திருப்பதாக மாருதி அதிகாரி ஒருவர் ரகசியமாக கூறியுள்ளார்.
இதுதொடர்பாக, அடுத்த வாரம் நடைபெற இருக்கும் நிறுவனத்தின் உயரதிகாரிகள் கூட்டத்தில் இறுதி முடிவு எடுக்கப்படும் என்றும் அந்த அதிகாரி கூறினார். ஆனால், தற்போது எதுவும் உறுதியாக கூற இயலாது என்றும் அவர் தெரிவித்தார்.


Click it and Unblock the Notifications








