ரூ.2 லட்சத்தில் புதிய 800 காரை அறிமுகப்படுத்த மாருதி தீவிரம்

Maruti Cervo
மானேசர் ஆலை பிரச்னையால் ஏற்பட்டு வரும் இழப்பை சரிகட்டிக் கொள்ளும் விதத்தில், பண்டிகை காலத்தில் புதிய ஆல்ட்டோ 800 காரை விற்பனைக்கு கொண்டு வருவதற்கு மாருதி முடிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், இந்த காரை ரூ.2 லட்சம் ஆரம்ப விலையில் அறிமுகப்படுத்தப்படும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

மானேசர் ஆலை பிரச்னையால் புதிய ஆல்ட்டோ 800 காரின் அறிமுகத்தை ஒத்திப்போடுவதாக மாருதி ஏற்கனவே தெரிவித்திருந்தது. ஆனால், ஸ்விப்ட், டிசையர் உற்பத்தி தடைபட்டுள்ளதால் அந்த நிறுவனத்துக்கு பெரும் இழப்பு ஏற்பட்டு வருகிறது. இந்த இரு கார்களும் அந்த நிறுவனத்தின் மொத்த விற்பனையில் 40 சதவீத பங்களிப்பை அளித்து வருகிறது.

மேலும், மானேசர் ஆலையை அவசரப்பட்டு திறக்கக்கூடாது என்பதில் அந்த நிறுவனம் திடமாக உள்ளது. பணியாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்த பின்னரே மானேசர் ஆலையை திறக்க மாருதி திட்டமிட்டுள்ளது.

மானேசர் ஆலையின் உற்பத்தி இழப்பை சரிகட்டிக் கொள்வதற்கு புதிய ஆல்ட்டோ 800 காரை விற்பனைக்கு கொண்டு வருவதே ஒரே வழியாக மாருதி கருதுகிறது. எனவே, விரைவில் புதிய ஆல்ட்டோ 800 கார் விற்பனைக்கு கொண்டு வருவதற்கான முயற்சிகளில் அந்த நிறுவனம் தீவிரமாக ஈடுபட்டிருக்கிறது.

புதிய ஆல்ட்டோ 800 காரை ரூ.2 லட்சம் விலையில் விற்பனைக்கு கொண்டு வர இருப்பதாகவும் தகவல்கள் கிடைத்துள்ளதால், டாடா நானோ, ஹூண்டாய் இயான் விற்பனையில் நிச்சயம் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று ஆட்டோமொபைல் துறையினர் கருத்து தெரிவிக்கின்றனர்.

More from DriveSpark

Article Published On: Tuesday, August 14, 2012, 10:11 [IST]
English summary
Country's largest car maker Maruti Suzuki is planning to launch Alto 800 early festive season. which has suffered a huge fall in sales due to its Manesar lock out, is now looking to fast track the launch of its New Alto 800 to push up volumes.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+