ஆட்டோமேட்டிக் எர்டிகாவை அறிமுகப்படுத்த மாருதி திட்டம்

Ertiga
எர்டிகாவின் ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் கொண்ட மாடலை அறிமுகப்படுத்த மாருதி திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஸ்விப்ட், டிசையர் போன்றே எர்டிகாவும் விற்பனையிலும் பின்னி எடுத்து வருகிறது. எம்பிவி செக்மென்ட்டில் சரியான விலையில் வந்திறங்கிய எர்டிகா பெட்ரோல் மற்றும் டீசல் மாடலில் கிடைப்பதும் கூடுதல் பலம்.

தற்போது எர்டிகாவின் டீசல் மாடலுக்கு 6 மாதங்கள் வரை காத்திருப்பு காலம் நீள்கிறது. இந்த நிலையில், எர்டிகாவின் ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் கொண்ட மாடலை விரைவில் விற்பனைக்கு கொண்டு வர மாருதி திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்தியாவை தவிர்த்து இந்தோனேஷிய மார்க்கெட்டிலும் எர்டிகா விற்பனைக்கு விடப்பட்டுள்ளது. அங்கு பெட்ரோல் மாடலில் மட்டுமே எர்டிகா விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில், இந்தோனேஷியாவில் விரைவில் ஆட்டோமேட்டிக் மாடல் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.

இதனால், இந்தியாவிலும் விரைவில் ஆட்டோமேட்டிக் எர்டிகா விற்பனைக்கு கொண்டு வர மாருதி திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும், எஸ்எக்ஸ்4 காரில் பொருத்தப்பட்டிருக்கும் அதே 4 ஸ்பீட் ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் எர்டிகாவிலும் பொருத்தப்பட இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

More from DriveSpark

Article Published On: Wednesday, August 15, 2012, 14:43 [IST]
English summary
Country's largest car maker Maruti is planning to launch Automatic transmission Variant Ertiga soon, says reports. The Auto version Ertiga will get 4 speed automatic transmission, currently fitted in SX4 sedan.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+