சிஎன்ஜியில் இயங்கும் ஆல்ட்டோ கே10: மாருதி தீவிரம்

எனவே, ஆல்ட்டோ விற்பனையை அதிகரிக்க மாருதி தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. மேலும், பெட்ரோல் பிரச்னையை சமாளிக்கும் விதமாக டீசல் ஆல்ட்டோவை களமிறக்கவும் மாருதி திட்டமிட்டுள்ளதாக நேற்று செய்தி வெளியிட்டிருந்தோம். இதற்கு ஓரிரு ஆண்டுகள் ஆகலாம்.
அதுவரை வாடிக்கையாளர்களை தக்க வைத்துக் கொள்ளும் விதமாக தற்போது இயற்கை எரிவாயுவில் இயங்கும் ஆல்ட்டோ கார் மாடலை விரைவில் மாருதி விற்பனைக்கு கொண்டு வர இருப்பதாக அந்த நிறுவனத்தின் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. எல்எக்ஸ்ஐ மற்றும் விஎக்ஸ்ஐ ஆகிய இரு வேரியண்ட்டுகளில் சிஎன்ஜி சிலிண்டர் பொருத்தப்பட்ட ஆல்ட்டோ கே10 கார் கிடைக்கும். சிஎன்ஜி ஆல்ட்டோ தற்போதைய பெட்ரோல் மாடலைவிட 50,000 வரை விலை கூடுதலாக இருக்கும்.
மேலும், ஒரு சில மாநிலங்களை தவிர ஏனைய மாநிலங்களில் சிஎன்ஜி எரிபொருள் நிலையங்கள் இல்லை. எனவே, சிஎன்ஜி ஆல்ட்டோ எந்தளவு மாருதியின் விற்பனையை தூக்கி நிறுத்தும் என்று தெரியவில்லை. இருந்தாலும், விற்பனையில் நிச்சயம் சிறிது முன்னேற்றத்தை ஏற்படுத்தலாம்.


Click it and Unblock the Notifications








