அடுத்த மாதம் வருகிறது 7 பேர் செல்லும் மாருதியின் புதிய கார்
மாதத்தி
மாதத்திற்கு ஒரு புதிய மாடலை களமிறக்கி மார்க்கெட்டை கிடுகிடுக்க வைத்து வருகிறது மாருதி. ஏ-ஸ்டார், ஸ்விப்ட் டிசையரை தொடர்ந்து அடுத்த மாதம் புத்தம் புதிய எம்பிவி காரான எர்டிகாவை களமிறக்க மாருதி திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.கடந்த மாதம் நடந்த ஆட்டோ கண்காட்சியில் 7 பேர் பயணம் செல்லும் வசதி கொண்ட புதிய எம்பிவி காரை மாருதி பார்வைக்கு அறிமுகப்படுத்தியது. ரூ.6 லட்சம் ஆரம்ப விலையில் இந்த புதிய காரை மாருதி களமிறக்கலாம் என்று தகவல்கள் பரவியதால் இந்த எம்பிவி மீது ஏகத்துக்கும் எதிர்பார்ப்பு வாடிக்கையாளர் மத்தியில் பரவி இருக்கிறது.
எர்டிகா என்ற பெயரில் வரும் இந்த புதிய எம்பிவி கார் டொயோட்டோ இன்னோவா, மஹிந்திரா ஸைலோ உள்ளிட்ட எம்பிவி ரக கார்களுக்கு கடும் போட்டியை ஏற்படுத்தும் என்று கருதப்படுகிறது. இந்த நிலையில், அடுத்த மாதம் எர்டிகாவை முறைப்படி அறிமுகப்படுத்த மாருதி திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதனால், இப்போதே எர்டிகா குறித்த விபரங்களை கேட்கவும், ரகசிய புக்கிங் ஏதும் நடக்கிறதா என்பதை அறிந்து கொள்ளவும் மாருதி ஷோரூம்களுக்கு வாடிக்கையாளர்கள் படையெடுக்க துவங்கியுள்ளனர். ஆனால், டீலர்களுக்கு இதுவரை எர்டிகா அறிமுகம் குறித்து சரியான தகவல்கள் எதுவும் கிடைக்கவில்லை என்று கூறப்படுகிறது.
புதிய எர்டிகா 1.4 லிட்டர் கே-சீரிஸ் பெட்ரோல் எஞ்சின் மற்றும் எஸ்எக்ஸ்4 செடான் காரில் பொருத்தப்பட்டிருக்கும் 1.3 லிட்டர் டிடிஐஎஸ் எஞ்சினுடன் வருகிறது. இதில், பெட்ரோல் மாடல் லிட்டருக்கு 16.02 கிமீ மைலேஜையும், டீசல் மாடல் லிட்டருக்கு 20.77 கிமீ மைலேஜையும் தரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
(மாருதி எர்டிகாவின் இருக்கை அமைப்பு, பல்வேறு கோணங்களில் காண இங்கே கிளிக் செய்யவும்)


Click it and Unblock the Notifications









