மேம்படுத்தப்பட்ட புதிய ரிட்ஸ் மாடலை களமிறக்க மாருதி தீவிரம்

கடந்த மாதம்தான் மேம்படுத்தப்பட்ட ஏ-ஸ்டார் காரை மாருதி அறிமுகப்படுத்தியது. மாருதியின் முக்கிய ஏற்றுமதி மாடலான ஏ-ஸ்டார் தற்போது அதிக அம்சங்களுடன் வந்து வாடிக்கையாளர்களை கவர்ந்துள்ளது.
இந்த நிலையில், சந்தை போட்டியை சமாளிக்கும் விதமாக ரிட்ஸ் ஹேட்ச்பேக் காரையும் மாருதி மேம்படுத்தி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மாருதி என்ட்ரி லெவல் கார்களில் ரிட்ஸ்தான் பெட்ரோல் மட்டுமல்லாது டீசல் மாடலிலும் கிடைக்கிறது. 1.2 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் மற்றும் 1.3 லிட்டர் மல்டிஜெட் டீசல் எஞ்சினுடன் தற்போது ரிட்ஸ் கிடைக்கிறது.
இந்த நிலையில், தற்போது இயற்கை எரிவாயுவில் இயங்கும் மாடலையும் களமிறக்க மாருதி திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வந்துள்ளன. இதன்மூலம், அனைத்து தரப்பு வாடிக்கையாளர்களுக்கும் புதிய ரிட்ஸ் சிறந்த தேர்வாக அமையும் என்று மாருதி கருதுகிறது.
மேலும், வெளிப்புறத்தை மாருதி கண்ணை கவரும் வகையில் பட்டை தீட்டி வருவதாகவும், உட்புறம் முன்பைவிட பிரிமியம் அம்சங்களுடன் வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications








