இழந்த மார்க்கெட் பங்களிப்பை மீண்டும் பிடிக்க மாருதி மும்முரம்

New Swift
பல்வேறு பிரச்னைகளால் தனது மார்க்கெட் பங்களிப்பை இழந்த மாருதி நிறுவனம் மீண்டும் தனது இடத்தை பிடிப்பதற்கான முயற்சிகளை முடுக்கி விட்டுள்ளது.

நாட்டின் மிகப்பெரிய கார் உற்பத்தி நிறுவனமான மாருதி, கார் மார்க்கெட்டின் விற்பனையில் பாதியளவு பங்களிப்பை கொடுத்து வந்தது. கடந்த ஆண்டில் அந்த நிறுவனத்தின் மார்க்கெட் பங்களிப்பு 47.5 சதவீதமாக இருந்தது.

இந்த நிலையில், தொழிலாளர் வேலை நிறுத்தப் பிரச்னை காராணமாக உற்பத்தியில் பெரும் பாதிப்பு ஏற்பட்டதால், மாருதிக்கு பலத்த இழப்பு ஏற்பட்டது. மேலும், மாருதியின் உற்பத்தி பிரச்னையால் பிற கார் நிறுவனங்கள் பலனடைந்தன.

இதனால், கடந்த ஆண்டு அக்டோபரில் மாருதியின் மார்க்கெட் பங்களிப்பு 47 சதவீதத்திலிருந்து 29 சதவீமாக குறைந்தது. இதனால், மாருதி கடும் அதிருப்தியடைந்தது. இந்த நிலையில், தொழிலாளர் பிரச்னைகள் ஓய்ந்து உற்பத்தி சீரடைந்துள்ளதால் மீண்டும் தனது மார்க்கெட் பங்களிப்பை வெகுவாக உயர்த்தும் முயற்சிகளை மாருதி முடுக்கி விட்டுள்ளது.

இதற்காக, எர்டிகா எம்பிவி உள்ளிட்ட புதிய ரக கார்களையும் விரைவில் அறிமுகப்படுத்த அந்த நிறுவனம் திட்டமிட்டுள்ளது. தவிர, டீலர் எண்ணிக்கையையும் அதிகரிக்கவும் மாருதி முடிவு செய்துள்ளது. இருப்பினும் பிற நிறுவனங்களும் புதிய மாடல்களை அடுத்தடுத்து அறிமுகப்படுத்தி வருவது மாருதிக்கு மேலும் நெருக்கடியை அதிகரித்துள்ளது.

More from DriveSpark

Article Published On: Wednesday, March 7, 2012, 10:21 [IST]
English summary
Maruti Suzuki plan 50 Percent market share. India’s largest passenger car Maruti market share decrease to 29 per cent in October 2011.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+