கார் வாங்கினால் பெட்ரோல் ப்ரீ: மாருதியின் நூதன ஆஃபர்

பெட்ரோல் விலை உயர்வால் கார் விற்பனை சரிந்துள்ளதையடுத்து, மாருதி பல சலுகைகளை அறிவித்து வருகிறது. கடந்த சில நாட்களுக்க முன் பெட்ரோல் கார்கள் மீது தள்ளுபடி சலுகைகளை அறிவித்தது.
அதிலும், திருப்தியடையாத மாருதி வாடிக்கையாளர்களை கவர தற்போது நூதன பரிசு திட்டத்தை அறிவித்துள்ளது. இந்த திட்டத்தின்படி, பெட்ரோல் கார் வாங்கும் வாடிக்கையாளர்கள் ஷோரூம்களில் வைக்கப்பட்டிருக்கும், பகடை காய்களை உருட்ட வேண்டும். அதில் விழும் எண்களுக்கு தக்கவாறு அதிகபட்சம் ரூ.2,800 மதிப்புக்கு 36 லிட்டர் பெட்ரோலை வாடிக்கையாளர்கள் இலவசமாக பெற முடியும்.
இந்த திட்டம் மூலம் வாடிக்கையாளர்கள் 550 கிமீ தூரத்துக்கான பெட்ரோலை இலவசமாக பெறும் வாய்ப்பு கிடைக்கும் என்று மாருதி தெரிவித்துள்ளது. இதன்மூலம் பெட்ரோல் கார் விற்பனை கணிசமாக உயர்த்த முடியும் என்று மாருதி கருதுகிறது.


Click it and Unblock the Notifications








