"மாருதி ஆலையில் உற்பத்தி விரைவில் முழு அளவை எட்டும்": ஹரியானா அமைச்சர்

மாருதி ஆலை
"இன்னும் ஒரு மாதத்திற்குள் மாருதியின் மானேசர் ஆலையில் உற்பத்தி முழு அளவை எட்டும்," என ஹரியானா மாநில தொழிற்துறை அமைச்சர் ரந்தீப் சிங் சுர்ஜிவாலா நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

கடந்த செவ்வாய்க்கிழமை மாருதியின் மானேசர் ஆலையில் உற்பத்தி மீண்டும் துவங்கப்பட்டிருக்கும் நிலையில், தொழிலாளர்கள் வரததால் முதல்கட்ட இலக்கை எட்ட முடியாதநிலையில் மாருதி இருக்கிறது. நாள் ஒன்றுக்கு 1,700 கார்கள் வரை உற்பத்தி செய்யும் திறன் படைத்த அந்த ஆலையில் தற்போது 100 கார்கள் கூட உற்பத்தி செய்ய முடியாத நிலை இருக்கிறது.

கூண்டோடு பணிநீக்கம் செய்யப்பட்ட 500 தொழிலாளர்கள் மீண்டும் போராட்டத்தில் ஈடுபடலாம் என்ற அச்சத்தால் அழைப்பு விடுக்கப்பட்ட தொழிலாளர்களும் பணிக்கு வரவில்லை. இந்த நிலையில், அடுத்த 15 நாட்கள் முதல் ஒரு மாதத்திற்குள் மானேசர் ஆலையில் உற்பத்தி முழு அளவை எட்டும் என ஹரியானா மாநில தொழிற்துறை அமைச்சர் ரந்தீப் சிங் சுர்ஜிவாலா தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில்,"மானேசர் ஆலையில் நடந்த சம்பவம் துரதிருஷ்டவசமானது. இச்சம்பவம் மாநிலத்தில் முதலீட்டாளர்களை அச்சமடைய வைத்துள்ளது.

இருப்பினும், இதுபோன்ற சம்பவங்கள் எதிர்காலத்தில் நடைபெறாத வண்ணம் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அடுத்த 15 நாட்கள் முதல் ஒரு மாதத்திற்குள் மானேசர் ஆலையில் உற்பத்தி முழு அளவை எட்டும் என நம்புகிறேன்," என்றார்.

Article Published On: Saturday, August 25, 2012, 11:49 [IST]
English summary
Maruti to restore its original production capacity at its Manesar plant within a month, Haryana Industries Minister Randeep Singh Surjewala said.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+