புதிய ரிட்ஸ் காரின் புகைப் படங்கள்: சுஸுகி வெளியீடு

புதிய வடிவமைப்பு மற்றும் வசதிகளுடன் ரிட்ஸ் காரை மாருதி விரைவில் விற்பனைக்கு கொண்டு வர இருக்கிறது. தற்போது புதிய ரிட்ஸ் காரின் சோதனை ஓட்டங்களை மாருதி தீவிரமாக நடத்தி வருகிறது.
இந்த நிலையில், மாருதி விற்பனை செய்து வரும் ரிட்ஸ் கார் ஜப்பான் மார்க்கெட்டில் ஸ்ப்ளாஷ் என்ற பெயரில் சுஸுகி விற்பனை செய்து வருகிறது. மேலும், புதிய ஸ்ப்ளாஷ் காரின் புகைப்படங்களை சுஸுகி அதன் ஜப்பானிய இணையதளத்தில் வெளியிட்டுள்ளது.
முன்பக்க கிரில், ஹெட்லைட், பனி விளக்குகள் அறை ஆகியவை புதிய வடிவமைப்பை பெற்று கவர்ச்சியாக தெரிகின்றன. முன்புற, பின்புற பம்பர்களும் ஸ்ப்ளாஷ் காரை மேலும் எடுப்பாக காட்டுகிறது.
லெதர் இருக்கைகள், க்ரோம் பூச்சுடன் கைப்பிடிகள் என உட்புறமும் கவரும் அம்சங்கள் ஏராளம். அடுத்த மாதம் ஜப்பானில் விற்பனைக்கு வருகிறது ஸ்ப்ளாஷ். எனவே, இந்தியாவில் புதிய ரிட்ஸ் விரைவில் விற்பனைக்கு வந்துவிடும் என்று தெரிகிறது.


Click it and Unblock the Notifications








