உற்பத்தி, இருப்பு இல்லை: ஆனால், ஸ்விப்ட்டுக்கு புக்கிங் தொடர்கிறது

Maruti Swift
மானேசர் ஆலை மூடப்பட்டு கார் உற்பத்தி அடியோடு பாதித்துள்ள நிலையில், ஸ்விப்ட், டிசையர் காருக்கு தொடர்ந்து மாருதி டீலர்களில் புக்கிங் செய்யப்பட்டு வருகிறது.

இருப்பு இல்லாத நிலையில், இந்த இரு கார் மாடல்களுக்கும் 1,10 லட்சம் புக்கிங் செய்யப்பட்டுள்ளது. உற்பத்தியும், இருப்பும் இல்லாததால் வெயிட்டிங் பீரியட் நீண்டு கொண்டே இருக்கிறது.

புக்கிங் செய்யப்பட்ட கார்களை டெலிவிரி கொடுப்பதற்கு இன்னும் 5 மாதங்களுக்கு மேல் ஆகலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த நிலையில், இந்த இரு கார் மாடல்களுக்கும் தொடர்ந்து மாருதி டீலர்களில் புக்கிங் செய்யப்படுகிறது.

ஏற்கனவே 4 மாதங்கள் வரை வெயிட்டிங் பீரியட் இருந்த நிலையில், தற்போது மேலும் நீண்டுள்ளது புக்கிங் செய்து காத்திருக்கும் வாடிக்கையாளர்கள் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கிறது.

இந்த நிலையில், சில வாடிக்கையாளர்கள் மாருதி ஆதரவாக கருத்து தெரிவித்துள்ளனர். டிசையர் காரை புக்கிங் செய்து காத்திருக்கும் பெங்களூரை சேர்ந்த ஒருவர் கூறுகையில், மாருதியை விட்டு பிற நிறுவனங்கள் மீது எனக்கு நம்பிக்கை இல்லை.

எனவே, எவ்வளவு நாட்களானாலும் காத்திருந்து டெலிவிரி பெற தயார் என்று தெரிவித்தார். இந்த கருத்தை புக்கிங் செய்து காத்திருக்கும் பலர் தெரிவிக்கின்றனர்.

இதனிடையே, மானேசர் பிரச்னைக்கு சுமூக தீர்வு கண்டு விரைவில் உற்பத்தியை துவங்கும் முயற்சிகளை மாருதி தீவிரமாக மேற்கொண்டுள்ளது.

இதுகுறித்து மாருதி மார்க்கெட்டிங் மற்றும் விற்பனைப் பிரிவு தலைவர் மாயன் பரீக் கூறுகையில்," பிரச்னைகளுக்கு விரைவி்ல் சுமூக தீர்வு கண்டு இயல்பு நிலை திரும்பும் என நம்புகிறோம்.

ஸ்விப்ட், டிசையர் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ள நிலையிலும், இரு கார்களுக்கும் தினமும் புக்கிங் குவிந்து வருகிறது. எங்களது நிலையை புரிந்துகொண்டு எங்கள் மீது நம்பிக்கை வைத்து பேராதரவு நல்கி வரும் வாடிக்கையாளர்களுக்கு நன்றி தெரிவிக்கிறேன்," என்றார்.

More from DriveSpark

Article Published On: Thursday, July 26, 2012, 17:26 [IST]
English summary
A new Maruti Suzuki Swift will be a hard car to get as the strike and lock out at the Manesar plant has resulted in no new Swifts being built in the past eight days. However Maruti Suzuki continues to receive bookings of the Swift. Reports say Maruti Suzuki's stock of new Swifts has come down drastically and will not last for too many days.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+