ஸ்விப்ட் சுமையை குறைக்க புதிய ரிட்ஸை களமிறக்கும் மாருதி

இதன்மூலம், ஸ்விப்ட் புக்கிங் சுமையை குறைத்துக்கொள்வதோடு, வாடிக்கையாளர்கள் பிற நிறுவனங்களுக்கு செல்லாமல் தவிர்க்க முடியும் என்று அந்த நிறுவனம் நம்புகிறது. தவிர, ரிட்ஸ் விற்பனையை அதிகரிப்பதன் மூலம் தனது விற்பனையும் அதிகரித்துக்கொள்ள முடியும் என்று அந்த நிறுவனம் கருதுகிறது.
ஸ்விப்ட்டின் வெயிட்டிங் பீரியட் இன்னும் குறைந்தபாடில்லை. டீசல் ஸ்விப்ட்டுக்கான வெயிட்டிங் பீரியட் தொடர்ந்து 6 மாதங்கள் வரை நீடிக்கிறது. இதனால், வாடிக்கையாளர்கள் பிற நிறுவனத்தின் கார் மாடல்களை தேர்வு செய்ய முடிவு செய்கின்றனர்.
இதனால், மாருதியின் விற்பனையில் சிறிது பின்னடவை ஏற்படுத்தியுள்ளது. இதை தடுக்கும் யுக்திகளை மாருதி தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. ஸ்விப்ட் புக்கிங் செய்ய வரும் வாடிக்கையாளர்கள் பிற நிறுவனங்களுக்கு செல்லாத வகையில், கூடுதல் அம்சங்களுடன் புதிய ரிட்ஸை மாருதி அவசரமாக அறிமுகப்படுத்த அந்த நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
ஏனெனில், ஸ்விப்ட்டிலும், ரிட்ஸிலும் ஒரே எஞ்சின்தான் பொருத்தப்பட்டிருக்கின்றன. பெர்ஃபார்மென்சிலும் ரிட்ஸுக்கு நல்ல பெயர் இருக்கிறது. எனவே, ஸ்விப்ட்டுக்கு மாற்றாக வாடிக்கையாளர்களுக்கு வாய்ப்பு வழங்கும் வகையில் புதிய ரிட்ஸை அவசரமாக மேம்படுத்தி வருகிறது மாருதி.
புதிய ரிட்ஸ் விற்பனைக்கு வந்தவுடன் டீலர்கள் வழியாக வாடிக்கையாளர்களுக்கு புதிய ரிட்ஸின் சாதகமான அம்சங்களை எடுத்துக்கூறி விற்பனை கூட்டிக்கொள்ள மாருதி திட்டமிட்டுள்ளது. இதன்மூலம், ஸ்விப்ட் மீதான புக்கிங் சுமையை குறைத்துக்கொள்ள முடியும்.
புதிய ரிட்ஸின் விற்பனையும் அதிகரிக்க முடியும் என்பதோடு, வாடிக்கையாளர்கள் பிற நிறுவனங்களுக்கு செல்வதை ஓரளவு தவிர்க்க முடியும் என்று ஒரே கல்லில் மூன்று மாங்காய் கணக்கை மாருதி போட்டு வைத்துள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.


Click it and Unblock the Notifications








