மேலும் 500 தொழிலாளர்களை வீட்டுக்கு அனுப்ப மாருதி முடிவு!

கடந்த மாதம் 18ந் தேதி மாருதியின் மானேசர் ஆலையில் நடந்த தொழிலாளர்களின் வன்முறை சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த வன்முறையில் அதிகாரி ஒருவர் அடித்துக் கொல்லப்பட்டார். ஏராளமானோர் காயமடைந்தனர்.
3,300 தொழிலாளர்கள் பணிபுரியும் அந்த ஆலையில், வன்முறை சம்பவம் நடந்த போது ஆலையில் 2,500 தொழிலாளர்கள் இருந்ததாக கூறப்படுகிறது.
இதில், வன்முறை சம்பவத்தில் ஈடுபட்டதாக 500 தொழிலாளர்களை மாருதி சமீபத்தில் வேலையிலிருந்து நீக்கியது. இதைத்தொடர்ந்து, 500 தற்காலிக தொழிலாளர்களையும் நீக்குவதற்கு முடிவு செய்துள்ளதாக மாருதி தெரிவித்துள்ளது.
இது மானேசர் பகுதியில் செயல்படும் பல்வேறு தொழிற்சங்கங்கள் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இதனால், மானேசரில் மீண்டும் போராட்டம் வெடிப்பதற்கான சூழ்நிலை நிலவுகிறது.
கடந்த வாரம் ஒட்டுமொத்தமாக 500 தொழிலாளர்களை நீக்கியதற்கு குர்கான் ஆலை தொழிற்சங்கம் கடும் எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு ஆலையை தொழிலாளர்களுடன் கைகோர்த்து கண்டன ஊர்வலம் நடத்தியது நினைவிருக்கலாம்.
ஆனால், இந்த போராட்டங்களுக்கு மாருதி செவிசாய்க்கவில்லை. இதனிடையே, என்டிடிவி செய்தி சேனலுக்கு பேட்டியளித்துள்ள மானேசர் ஆலை தொழிற்சங்கத்ததை சேர்ந்தவர்கள், வன்முறை திட்டமிட்டு நடத்தப்படவில்லை, என்று தெரிவித்துள்ளனர்.


Click it and Unblock the Notifications