மாருதி விற்பனை சரிவால் பலனடைந்தவர்கள் யார் யார்?

மானேசர் ஆலையில் தொழிலாளர் வன்முறையால் ஒரு மாத காலம் தொழிற்சாலையில் உற்பத்தி பாதிக்கப்பட்டதே இதற்கு காரணமாகியது. ஆனால், மாருதி உற்பத்தி பாதிக்கப்பட்டதால் ஹூண்டாய் உள்ளிட்ட பிற கார் நிறுவனங்களின் விற்பனை சிறிதளவு முன்னேற்றம் கண்டிருக்கிறது. இரு நிறுவனங்களும் ஒரே செக்மென்ட்டில் கார்களை விற்பனை செய்து வருவதால் ஹூண்டாய்க்கு சிறிதளவு பலன் கிட்டியதாக கூறலாம்.
கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் 26,677 கார்களை விற்பனை செய்திருந்த ஹூண்டாய் கடந்த மாதம் 28,257 கார்களை விற்பனை செய்து 5.9 சதவீத வளர்ச்சியை பதிவு செய்துள்ளது. போக்ஸ்வேகன், நிசான், செவர்லே ஆகியவை மாருதியின் மார்க்கெட்டிலிருந்து சிறிதளவு பலன் அடைந்ததாக கூறலாம்.
இதற்கடுத்து, டாடா மோட்டார்ஸ் பயணிகள் வாகன விற்பனை 33 சதவீதம் உயர்ந்தது.கடந்த ஆண்டு ஆகஸ்ட்டில் வெறும் 16,829 பயணிகள் வாகனங்களை விற்பனை செய்திருந்த அந்த நிறுவனம் கடந்த மாதம் 22,311 பயணிகள் வாகனங்களை விற்பனை செய்துள்ளது. மஹிந்திரா நிறுவனத்தின் உள்நாட்டு வாகன விற்பனையும் 20 சதவீதம் அதிகரித்துள்ளது.
கடந்த மாதம் மஹிந்திரா நிறுவனம் 42,826 பயணிகள் வாகனங்களை விற்பனை செய்து ஆரோக்கியமான விற்பனை வளர்ச்சியை பதிவு செய்துள்ளது. மாருதியின் உற்பத்தி இழப்பால் மஹிந்திரா அதிகம் பலனடைந்ததாக கூற இயலாது. மஹிந்திராவின் மார்க்கெட்டும், மாருதியின் மார்க்கெட்டும் வேறு வேறு.
பெட்ரோல் விலை, பண வீக்கம் உள்ளிட்ட பல காரணங்களால் வாகன விற்பனை கடந்த மாதம் மந்தமாக இருந்தது. ஆனால், மாருதியின் விற்பனை சரிவு பிற நிறுவனங்களின் கார் விற்பனையில் சிறிதளவு உயர்வை கொடுத்திருக்கிறது என ஆட்டோமொபைல் துறையினர் தெரிவித்துள்ளனர்.


Click it and Unblock the Notifications