7 மாதங்களுக்கு பின் ஜனவரியில் மாருதியின் விற்பனை அதிகரிப்பு

நாட்டின் கார் உற்பத்தியில் முதலிடம் வகிக்கும் மாருதி நிறுவனத்துக்கு கடந்த ஆண்டு பெரும் சோதனையான ஆண்டாக அமைந்தது. தொழிலாளர் வேலைநிறுத்தம், கார் கடன் வட்டி உயர்வு, பெட்ரோல் விலை உயர்வு போன்ற பல காரணங்களால் மாருதியின் கார் விற்பனை பெரும் வீழ்ச்சி கண்டது.
கடந்த ஆண்டு டிசம்பர் வரை தொடர்ச்சியாக 7 மாதங்கள் அந்த நிறுவனத்தின் பெரும் சரிவை சந்தித்து வந்தது. இதனால், அந்த நிறுவனத்தின் வருவாயும் வெகுவாக குறைந்தது.
இந்த நிலையில், 7 மாதங்களுக்கு பிறகு கடந்த ஆண்டு மாருதியின் கார் விற்பனை கடந்த மாதம் அதிகரித்துள்ளது. கடந்த மாதம் அந்த நிறுவனம் 1,09,743 கார்களை விற்பனை செய்திருந்தது. இது கடந்த ஆண்டு ஜனவரி விற்பனையை ஒப்பிடும்போது(1,15,433 கார்கள்) விற்பனை 5.18 சதவீதம் அதிகரித்துள்ளது.
இதில், உள்நாட்டில் 1,01,047 கார்களையும், ஏற்றுமதி மூலம் 14,386 கார்களையும் அந்த நிறுவனம் விற்பனை செய்துள்ளது. 7 மாதங்களாக விற்பனை சரிந்ததால் சோர்ந்து போயிருந்த மாருதி நிறுவனம் தற்போது சற்றே ஆறுதலடைந்துள்ளது.


Click it and Unblock the Notifications








