ஜூலையில் கார் விற்பனை 9.2% அதிகரிப்பு: ஆறுதலடைந்த மாருதி

உள்நாட்டு மார்க்கெட்டில் மொத்தம் 71,024 கார்களை அந்த நிறுவனம் விற்பனை செய்திருக்கிறது. கடந்த மாதம் ஆல்ட்டோ, மாருதி 800, ஏ-ஸ்டார், வேகன்-ஆர் உள்ளடக்கிய சிறிய கார் ரகத்தில் மொத்தமாக 28,998 கார்களை விற்பனை செய்திருக்கிறது.
கடந்த மாதம் ஸ்விப்ட், ரிட்ஸ் கார்களின் ரகத்தில் மொத்தமாக 15,759 கார்களை மாருதி விற்பனை செய்துள்ளது. கடந்த மாதம் மாருதியின் கார் விற்பனையில் முக்கிய இடம் பிடித்த மற்றொரு கார் டிசையர். கடந்த மாதம் 11,413 டிசையர் கார்கள் விற்பனையாகியிருக்கின்றன.
மானேசர் ஆலையில் தொழிலாளர் பிரச்னையால் உற்பத்தி பாதிக்கப்பட்டதால், ஸ்விப்ட், டிசையர் கார்களின் டெலிவிரி பாதிக்கப்பட்டிருக்கிறது. இருப்பினும், கடந்த மாதம் நல்ல விற்பனை வளர்ச்சியை மாருதி பதிவு செய்துள்ளது.
ஆனால், டெலிவிரி பாதிப்பின் முழுமையான தாக்கம் இந்த மாதம்தான் தெரியும் என்பதால், மாருதியின் விற்பனை வளர்ச்சியில் பாதிப்பு ஏற்படலாம் என்று கருதப்படுகிறது.


Click it and Unblock the Notifications








