தனி நபர்களுக்கும் டிசையர் டூர் விற்பனை: மாருதியின் மாற்று திட்டம்

கடந்த பிப்ரவரி மாதம் விற்பனைக்கு கொண்டு வரப்பட்ட மாருதியின் புதிய குட்டி டிசையர் விற்பனையில் சக்கைபோடு போட்டு வருகிறது. இந்த நிலையில், முன்பு விற்பனை செய்யப்பட்டு வந்த ஓல்டு டிசையரை டூர் என்று பெயரை மாற்றி டாக்சி மார்க்கெட்டில் மட்டும் தற்போது விற்பனை செய்து வருகிறது மாருதி.
டிசையர் டூர் வேரியன்ட்டில் அதிக வசதிகள் இல்லாமல் அடிப்படை வசதிகள் மட்டுமே இருக்கும். இந்த நிலையில், மானேசர் ஆலை பிரச்னையால் புதிய டிசையர் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளதால் வாடிக்கையாளர்கள் பெரும் அதிருப்தியில் ஆழ்ந்துள்ளனர். எனவே, டாக்சியாக விற்பனை செய்யப்பட்டு வரும் டிசையர் டூர் வேரியன்ட்டில் சில ஆக்சஸெரீஸ்களை பொருத்தி தனி நபருக்கும் விற்பனை செய்ய மாருதி முடிவு எடுத்துள்ளது.
12,000 முதல் 15,000 டிசையர் டூர் கார்கள் ஸ்டாக்கில் இருப்பதாக தெரிகிறது. இதனை, டாக்சி அல்லாத தனி நபர் வாடிக்கையாளர்களுக்கு விற்பனை செய்ய மாருதி முடிவு செய்துள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.
டிசையர் டூர் பெட்ரோல் மாடல் ரூ.5.12 லட்சம் ஆரம்ப விலையிலும், டீசல் மாடல் ரூ.6.16 லட்சம் ஆரம்ப விலையிலும் விற்பனை செய்யப்படுகிறது.


Click it and Unblock the Notifications








