ஸ்விப்ட்டுக்கு ரீகால்: பிரேக் பிரச்னையை சரிசெய்து தரும் மாருதி

By Saravana
Swift
புதிய ஸ்விப்ட் கார்களின் பிரேக்குளில் ஏற்பட்ட பிரச்னையை ரகசியமாக சரிசெய்து கொடுத்து வருகிறது மாருதி.

கடந்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட புதிய ஸ்விப்ட் விற்பனையில் பல புதிய சாதனைகளை படைத்து வருகிறது. இந்த நிலையில், புதிய ஸ்விப்ட்டின் பிரேக்குகளில் பிரச்னை இருப்பதாக உரிமையாளர்களிடமிருந்து புகார்கள் எழத் துவங்கின. குறைந்த வேகத்தில் செல்லும்போது பிரேக் சரியாக பிடிப்பதில்லை என்பது புகார்.

இதனை மாருதி திட்டவட்டமாக மறுத்தது. அத்தோடு, ஸ்விப்ட் காரின் பிரேக்குகள் நவீன தொழி்லநுட்பம் கொண்டது எனவும், உரிமையாளர்கள் டிரைவிங் ஸ்டைலை மாற்றிக்கொள்ளும்படியும் மாருதி அறிவுறுத்தியது. இது வாடிக்கையாளர் மத்தியில் ஏமாற்றத்தை ஏற்படுத்தியது.

ஆனால், ஸ்விப்ட் பிரேக் பிரச்னை குறித்து தொடர்ந்து புகார்கள் எழுந்ததால் பிரச்னை பெரிதாகி வருவதை மாருதி உணர்ந்து ஸ்விப்ட் பிரேக்கிங் சிஸ்டத்தை ஆய்வு செய்தது. அதில், பிரேக்குகளில் தொழில்நுட்ப பிரச்னை இருப்பதை உணர்ந்துகொண்டது. இதையடுத்து, புதிய ஸ்விப்ட் கார் வாடிக்கையாளர்களை அருகில் இருக்கும் சர்வீஸ் மையத்துக்கு வந்து பிரச்னையை சரிசெய்து கொள்ளுமாறு தகவல் அனுப்பியுள்ளது.

ஸ்விப்ட்டின் எஞ்சின் கன்ட்ரோல் யூனிட்(இசியூ)சாப்ட்வேரில் எஞ்சினிலிருந்து பிரேக்குகளுக்கு அழுத்தத்தை கொடுக்கும் கட்டுப்பாட்டு சாப்ட்வேரை அப்டேட் செய்து கொடுத்து வருகிறது மாருதி. இதன்மூலம், இந்த பிரச்னைக்கு தற்போது தீர்வு காணப்பட்டுள்ளது.

More from DriveSpark

Article Published On: Thursday, September 13, 2012, 15:10 [IST]
English summary
Several owners of the Maruti Suzuki Swift had reported a braking issue in their cars earlier this year. The leading Indian carmaker which had initially chosen to ignore their complaints is now reportedly rectifying the problem without recalling the Swift.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+