சொந்தமாக ஆட்டோ இன்ஸ்யூரன்ஸ் நிறுவனத்தை துவங்கும் மாருதி

நம் நாட்டு கார் உற்பத்தியில் மாருதி நிறுவனம்தான் முதலிடம் வகிக்கிறது. இதுவரையிலும் அந்த நிறுவனம் காப்பீட்டு நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்து கொண்டு கார்களுக்கான காப்பீட்டை கார்களுக்கு செய்து வந்தது.
இந்த நிலையில், தனது கார்களுக்கான காப்பீட்டை சொந்தமாக செய்து கொடுக்கும் வகையில் புதிய காப்பீட்டு நிறுவனத்தை மாருதி துவங்கவுள்ளது. இதற்கான லைசென்சை மத்திய காப்பீட்டு ஒழுங்குமுறை ஆணையத்திடம் இருந்து மாருதி பெற்று வி்டடது.
இருப்பினும், மாருதியின் இன்ஸ்யூரன்ஸ் நிறுவனத்தின் செயல்பாடுகளை தனியாக நிர்வகிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், மாருதியின் விற்பனை மற்றும் மார்க்கெட்டிங் பிரிவு தலைவர் மாயன் பரீக் இந்த புதிய இன்ஸ்யூரன்ஸ் நிறுவனத்தின் தலைவராக செயல்படுவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதிய இன்ஸ்யூரன்ஸ் நிறுவனம் துவங்கப்பட்டவுடன் மாருதி கார்களுக்கு தனது சொந்த இன்ஸ்யூரன்ஸ் நிறுவனத்தின் மூலம் காப்பீடு சேவையை மாருதி வழங்கும். டீலர்கள் வாயிலாக இன்ஸ்யூரன்ஸ் சேவையை மாருதி வழங்கும் என்று தெரிகிறது.


Click it and Unblock the Notifications








