இந்த மாதத்துடன் 800 கார் உற்பத்தியை முற்றிலும் நிறுத்தும் மாருதி

மாருதி நிறுவனத்தை தோள் கொடுத்த தூக்கிய நிறுத்திய 800 கார் உற்பத்தி இந்த மாதத்துடன் முற்றிலுமாக நிறுப்படுகிறது.

மாருதி நிறுவனத்தின் முதல் கார் மாடலான 800 கடந்த 1983ம் ஆண்டு விற்பனைக்கு வந்தது. அடக்கமான வடிவமைப்பு மற்றும் சிறந்த மைலேஜ் ஆகிய சிறப்பம்சங்களால் மார்க்கெட்டில் முக்கிய இடத்தை பிடித்தது.


ஒன்றிரண்டு ஆண்டுகள் அல்ல. இதுவரை 29 ஆண்டுகளுக்கும் மேலாக மார்க்கெட்டில் நன் மதிப்பை பெற்ற காராக திகழ்ந்து வருகிறது. மாருதி முதன்மையான நிறுவனமாக மாறியதற்கு அடித்தளம் அமைத்துக் கொடுத்த பெருமை 800 காரையே சாரும்.

இந்த நிலையில், போட்டியை சமாளிக்கும் விதத்திலும், வாடிக்கையாளர்களின் மனப்போக்கை அறிந்து கொண்டும் ஆல்ட்டோ பிளாட்பார்மில் வடிவமைக்கப்பட்ட புதிய 800 காரை மாருதி விரைவில் அறிமுகம் செய்கிறது.

இதற்காக, தற்போதைய 800 காரின் உற்பத்தியை இந்த மாதத்துடன் முற்றிலுமாக நிறுத்துகிறது மாருதி. இதுதொடர்பாக, 800 காருக்கு உதிரிபாகங்கள் சப்ளையர்களிடம் மாருதி முறைப்படி தெரிவித்துவிட்டதாகவும் தகவல்கள் கூறுகின்றன.

எனவே, புதிய மாருதி 800 கார் விரைவி்ல் விற்பனைக்கு வருவதற்கான சாத்திக்கூறுகள் ஏற்பட்டுள்ளன. ஆனால், இதுகுறித்து மாருதி இதுவரை எந்த தகவலையும் வெளியிடவில்லை.

Most Read Articles
English summary
Maruti has decided to stop the 800 car production completely by this month, reports says. The company has already informed the suppliers regarding this matter.
Story first published: Wednesday, April 18, 2012, 15:13 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X