புதிய ஆல்ட்டோவுக்கு அராய் கொடுத்த மைலேஜ் சர்டிபிகேட்
மாருதி விரைவில் விற்பனைக்கு கொண்டு வரும் புதிய ஆல்ட்டோ 800 கார் லிட்டருக்கு 22.74 கிமீ மைலேஜ் தருவதாக அராய் சான்றளித்துள்ளது.
அடுத்த மாதம் 16ந் தேதி விற்பனைக்கு வர இருக்கும் புதிய ஆல்ட்டோ 800 கார் மீது நடுத்தர வர்க்க வாடிக்கையாளர்களின் ஒட்டுமொத்த கவனமும் திரும்பியிருக்கிறது.

குறிப்பாக, மேம்படுத்தப்பட்ட புதிய 800சிசி எஞ்சினுடன் வரும் இந்த கார் அதிக மைலேஜ் கொடுக்கும் என்பதும் இதில் முக்கிய காரணம். இந்த நிலையில், புதிய ஆல்ட்டோ கார் லிட்டருக்கு 22.74 கிமீ மைலேஜ் செல்லும் என அராய் சான்றளித்துள்ளது.
பழைய ஆல்ட்டோ காரைவிட இது 15 சதவீதம் கூடுதல் மைலேஜ் கொடுக்கும் காராக இருக்கும் என மாருதி வட்டாரங்களும் சர்டிபிகேட் கொடுக்கின்றன. நடைமுறையில் பார்க்கும்போது அராய் குறிப்பிட்ட மைலேஜைவிட சிறிது குறையலாம்.
இருப்பினும், இந்த காரின் ரகத்தை சேர்ந்த பிற கார் மாடல்களுடன் ஒப்பிடும்போது இது அதிக மைலேஜ் கொடுக்கும் காராக இருக்கும் என்று நம்பலாம்.


Click it and Unblock the Notifications








