விற்பனையில் 20 லட்சத்தை கடந்து மாருதி ஆல்ட்டோ சாதனை
மாருதியின் வெற்றிகரமான கார் மாடலான ஆல்ட்டோ விற்பனை 20 லட்சத்தை கடந்து புதிய மைல்கல்லை எட்டியுள்ளது.
அதிக மைலேஜ், குறைந்த விலை ஆகிய காரணங்களால் நாட்டின் அதிகம் விற்பனையாகும் கார் மாடல் என்ற பெருமையை கடந்த 7 ஆண்டுகளாக ஆல்ட்டோ தக்க வைத்து வருகிறது. கடந்த 2 ஆண்டுகளாக உலகின் அதிகம் விற்பனையாகும் கார் மாடல் என்ற பெருமையையும் தக்க வைத்து வருகிறது.

விற்பனைக்கு வந்து 11 ஆண்டுகள் 9 மாதங்களில் இந்த புதிய 20 லட்சம் என்ற விற்பனை எண்ணிக்கையை ஆல்ட்டோ எட்டியுள்ளது. 8 ஆண்டுகள் 3 மாதங்களில் 10 லட்சம் மைல்கல்லை எட்டிய ஆல்ட்டோ, அடுத்த மூன்றரை ஆண்டுகளில் அடுத்த 10 லட்ச இலக்கை கடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், பெட்ரோல் விலையால் ஆல்ட்டோ விற்பனை கடந்த சில மாதங்களாக குறைய துவங்கியுள்ளது. இதையடுத்து, ஆல்ட்டோவுக்கு மாற்றாக புதிய கார் மாடலை விரைவில் மாருதி களமிறக்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும், பெட்ரோல் மற்றும் டீசல் மாடலில் புதிய ஆல்ட்டோ விற்பனைக்கு வர இருப்பதாகவும் கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications