குர்கான் ஆலையிலும் டிசையர் உற்பத்தி: காத்திருப்பு காலம் குறையும்

Dzire
புக்கிங் சுமையை குறைக்கும் விதத்தில் குர்கான் ஆலையிலும் டிசையர் உற்பத்தியை மாருதி துவங்கியிருக்கிறது. இதனால், டிசையர் புக்கிங் செய்த வாடிக்கையாளர்களுக்கு விரைவாகவே டெலிவிரி கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

மாருதியின் அதிகம் விற்பனையாகும் கார் மாடல்களான ஸ்விப்ட் மற்றும் டிசையர் கார்கள் மானேசர் ஆலையில் உற்பத்தி செய்யப்படுகின்றன. தொழிலாளர் பிரச்னையால் தற்போது மானேசர் ஆலையில் கார் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. உற்பத்தி மீண்டும் துவங்கப்பட்டுவிட்டாலும், இயல்பு நிலையை எட்டவில்லை.

இந்த நிலையில், டிசையர் காருக்கு மட்டும் 65,000 பேர் புக்கிங் செய்து காத்திருக்கின்றனர். இதையடுத்து, புக்கிங் சுமையை குறைக்கும் விதத்தில் மானேசர் ஆலை தவிர்த்து குர்கான் ஆலையிலும் டிசையர் கார் உற்பத்தியை துவங்கியிருக்கிறது மாருதி. இந்த காருக்கு 8 மாதங்கள் வரை காத்திருப்பு காலம் இருந்து வந்தது.

குர்கான் ஆலையிலும் உற்பத்தி துவங்கப்பட்டிருப்பதால் அடுத்த 4 மாதங்களில் புக்கிங் செய்த வாடிக்கையாளர்களுக்கு டிசையர் கார் டெலிவிரி கொடுத்து விட முடியும் என மாருதி வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. புக்கிங் செய்த வாடிக்கையாளர்களுக்கு மட்டுமின்றி, டிசையர் வாங்கத் திட்டமிட்டுள்ளவர்களு்ககும் இது இனிப்பான செய்தியாகத்தான் இருக்கும்.

Article Published On: Thursday, September 6, 2012, 12:53 [IST]
English summary
In order to clear pending orders of over 65,000 units of the new Dzire, Maruti Suzuki India today said it has started manufacturing the popular new compact sedan at the Gurgaon plant besides rolling it out from the troubled Manesar facility.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+