அடுத்த மாதம் 12ந் தேதி விற்பனைக்கு வரும் மாருதி எர்டிகா

Maruti Ertiga
அடுத்த மாதம் 12ந் தேதி எர்டிகா எம்பிவி காரை விற்பனைக்கு கொண்டு வருகிறது மாருதி. நிசான் இவாலியா, செவர்லே எம்பிவி கார்களுக்கு முன்னதாகவே பந்திக்கு முந்துகிறது எர்டிகா.

மார்க்கெட்டில் பாதியளவுக்கு பங்களிப்பை கொடுத்து வரும் மாருதி ஈக்கோ எம்பிவி காரை விற்பனை செய்து வருகிறது. ஆனால், அந்த காரை ஓர் முழுமையான எம்பிவி காராக வாடிக்கையாளர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை.

இந்த குறையை போக்கி வாடிக்கையாளர்களை கவரும் வகையில், நவீன தொழில்நுட்ப வசதிகளுடன் புத்தம் புதிய எர்டிகா எம்பிவி காரை மாருதி டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகம் செய்தது.

இந்த நிலையில், பெட்ரோல் மற்றும் டீசல் எஞ்சின் மாடல்களில் விற்பனைக்கு வர இருக்கும் எர்டிகா மாருதி ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. அடுத்த மாதம் 11ந் தேதி எர்டிகா வர இருப்பதாக ஏற்கனவே தகவல்கள் கூறின.

இந்த நிலையில், அடுத்த மாதம் 12ந் தேதி எர்டிகா எம்பிவியை விற்பனைக்கு கொண்டு வர இருப்பதாக மாருதி நிறுவனமே தெரிவித்துள்ளது. டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் மாருதி எர்டிகா போன்றே நிசான் எவாலியா மற்றும் செவர்லே என்ஜாய் எம்பிவி கார்களும் பார்வைக்கு வைக்கப்பட்டிருந்தன.

இதில், மாருதி எர்டிகாதான் முதலில் விற்பனைக்கு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. ரூ.7 லட்சம் விலையில் மாருதி எர்டிகா விற்பனைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

More from DriveSpark

Article Published On: Thursday, March 29, 2012, 10:26 [IST]
English summary
Maruti Suzuki India has confirmed the launch of its 7-seater Ertiga MPV on 12th of April, 2012. The Ertiga, which is being called by Maruti as a life utility vehicle to focus on family buyers will be a niche vehicle with no competitors as of now. Ertiga will be eyeing on hatchback upgraders who needs a spacious vehicle with more seating capacity.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+