பெரும் எதிர்பார்ப்புடன் துவங்கும் 10வது மாருதி டிசர்ட் ராலி பந்தயம்

நம் நாட்டு மோட்டார் ஸ்போர்ட் பந்தயங்களில் மிக பிரபலமானது மாருதி டிசர்ட் ராலி கார் பந்தயம். ஆண்டுதோறும் நடைபெறும் இந்த பந்தயம் தற்போது 10 வது எடிசனை எட்டியுள்ளது. கரடு முரடான சாலைகளை போட்டியாளர்கள் கடந்து செல்லும் வகையில் இந்த பந்தயம் அமைந்திருக்கும்.
இந்த நிலையில், 10 வது மாருதி டிசர்ட் ராலி கார் பந்தயம் வரும் திங்கட்கிழமை துவங்குகிறது. டெல்லியில் துவங்கும் இந்த போட்டி ராஜஸ்தான், குஜராத் மாநிலங்கள் வழியாக 3,500 கிமீ தூரத்தை போட்டியாளர்கள் 6 நாட்களில் கடக்க வேண்டும்.
இந்த போட்டியில் இரவிலும் கரடு முரடான பாதைகள் வழியாக போட்டியாளர்கள் செல்வதால் சவால் நிறைந்ததாகவும், பார்வையாளர்களுக்கு த்ரில்லிங்காக இருக்கும் என்று நம்பலாம்.
இரவில் ராஜஸ்தான் மாநிலம் சர்தார்சாகர், பிகனேர் மற்றும் பொக்ரான் பாலைவனப் பகுதி வழியாக ரேஸ் நடைபெறும் என்பதால் மிகுந்த சவால்களை போட்டியாளர்கள் சந்திக்க நேரிடும்.
இந்த கார் ரேஸில் முதன்முறையாக பெண் போட்டியாளர்களும் கலந்து கொள்கின்றனர். அவர்கள் ஸ்விப்ட் காரில் செல்வார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications








