ஆலை ஊழியர்களுக்கு தற்காப்பு கலை கற்றுத் தரும் மாருதி!

கடந்த ஜூலை மாதம் மானேசர் ஆலையில் தொழிலாளர்கள் நடத்திய வன்முறை சம்பவத்தில் அதிகாரி கொல்லப்பட்டார். அதிகாரிகள் உட்பட ஏராளமானோர் படுகாயமடைந்தனர். இதனால், கோபமடைந்த மாருதி 500 தொழிலாளர்களை அதிரடியாக வேலையிலிருந்து நீக்கியது.
பணியிலிருந்து நீக்கப்பட்ட தொழிலாளர்கள் மற்றும் இதர தொழிற்சங்களால் மாருதி அதிகாரிகளுக்கு அச்சுறுத்தல் இருக்கிறது. இதை மனதில் கொண்டு குர்கான் மற்றும் மானேசர் ஆலையில் பணிபுரியும் அதிகாரிகள் மற்றும் இதர ஊழியர்களுக்கு தற்காப்பு கலை பயிற்சி கொடுத்து வருகிறது மாருதி.
இதற்காக, டெல்லியை சேர்ந்த இன்விக்டஸ் சர்வைவல் சயின்சஸ் நிறுவனத்தின் தற்காப்பு கலை தலைமை பயிற்றுனர் அனுஜ் ஷர்மாமை மாருதி நியமித்துள்ளது. முதல் கட்டமாக குர்கான் ஆலையை சேர்ந்த 30 ஊழியர்களுக்கு நேற்று பயிற்சி கொடுக்கப்பட்டது. 4 மணிநேரம் நடந்த இந்த பயிற்சியில் பலவிதமான தற்காப்பு கலை பயிற்சிகள் அளிக்கப்பட்டன.
இது மிகவும் பயனுள்ள பயிற்சி என மாருதி ஊழியர்கள் தெரிவித்தனர். இதுதவிர, ஊழியர்கள் பலரும் தியான வகுப்புகளிலும் கலந்துகொண்டு வருவதாக தெரிவித்தனர்.


Click it and Unblock the Notifications