விற்பனையில் வெளுக்கும் புதிய டிசையர்: மாருதி விற்பனை 6.5% உயர்வு

நாட்டின் மிகப்பெரிய கார் நிறுவனமான மாருதிக்கு இந்த ஆண்டு துவக்கம் நன்றாகவே இருக்கிறது. கடந்த ஆண்டு இறுதியில் மோசமான விற்பனையை பதிவு செய்த, கடந்த இரு மாதங்களாக விற்பனை அதிகரித்துள்ளது ஆறுதலை தந்துள்ளது.
இந்த நிலையில், கடந்த மாதம் 1ந் தேதி விற்பனைக்கு வந்த புதிய ஸ்விப்ட் டிசையர் வாடிக்கையாளர் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. விற்பனைக்கு வந்து முதல் மாதத்திலேயே 15,068 குட்டி டிசையர் கார்கள் விற்பனையாகி மாருதிக்கு புதுத்தெம்பை ஊட்டியுள்ளது.
இதனால், கடந்த மாதம் மாருதியின் விற்பனை 6.5 சதவீதம் அதிகரித்துள்ளது. உள்நாடு மற்றும் ஏற்றுமதியை சேர்த்து கடந்த மாதம் 1.19 லட்சம் கார்களை மாருதி விற்பனை செய்துள்ளது. இதில், ஸ்விப்ட் ஹேட்ச்பேக், ஸென் எஸ்டீலோ, ரிட்ஸ் ஆகிய கார்கள் மொத்தமாக 27,900 யூனிட்டுகள் விற்பனையாகியுள்ளன.
மேலும், கடந்த மாதம் உள்நாட்டில் 1,07,653 கார்களை விற்பனை செய்துள்ள மாருதி, 11,296 கார்களை ஏற்றுமதி செய்துள்ளதாக தெரிவித்துள்ளது.


Click it and Unblock the Notifications








