பட்ஜெட் எஃபெக்ட்: கார் விலையை ரூ.17,000 வரை உயர்த்திய மாருதி

Maruti 800
பட்ஜெட்டில் கலால் வரி உயர்த்தப்பட்டதையடுத்து, அனைத்து கார் மாடல்களின் விலையையும் ரூ.17,000 வரை உயர்த்தியுள்ளது மாருதி.

பட்ஜெட்டில் கார்களுக்கான உற்பத்தி வரி 2 சதவீதம் அதிகரிக்கப்பட்டிருக்கிறது. இதனால், அனைத்து கார் நிறுவனங்களும் கார்கள் விலையை உயர்த்தி வருகின்றன.

நாட்டின் மிகப்பெரிய கார் நிறுவனமான மாருதியும் கார்களின் விலையை உயர்த்தியுள்ளது. சராசரியாக கார்களின் விலையை 1.75 சதவீதம் அதிகரித்துள்ளது மாருதி.

மாருதியின் விற்பனையில் நம்பர் ஒன்னாக இருக்கும் ரூ.4,200 முதல் ரூ.5,900 வரை அதிகரித்துள்ளது. ஆல்ட்டோ கே-10 விலை ரூ.5,500 முதல் ரூ.5,700 வரை அதிகரிக்கப்பட்டுள்ளது.

விற்பனையில் வெளுத்து கட்டும் மற்றொரு மாருதி கார் மாடலான வேகன்-ஆர் காரின் விலை ரூ.6,000 முதல் ரூ.7,600 வரை அதிகரித்துள்ளது. இதையடுத்து, வேகன்-ஆர் காரின் விலை ரூ.3.47 லட்சம் முதல் ரூ.4.37 லட்சம் வரையிலான விலையில் விற்பனை செய்யப்படும்.

அடுத்து அனைவரின் விருப்பமான ஸ்விப்ட்டும் இனி காஸ்ட்லிதான். ஆம், ஸ்விப்ட்டின் விலையை ரூ.7,000 முதல் ரூ.11,000 வரை அதிகரித்துவிட்டது மாருதி. கடந்த மாதம் அறிமுகம் செய்யப்பட்ட ஸ்விப்ட் டிசையர் செடான் காரின் விலை ரூ.,8,500 முதல் ரூ.12,700 வரை அதிகரித்துள்ளது மாருதி.

எஸ்எக்ஸ்-4 மிட்சைஸ் செடான் காரின் விலை ரூ.17,000 அதிகரிக்கப்பட்டுள்ளது. மாருதியின் மார்க்கெட்டிங் மற்றும் விற்பனைப் பிரிவு நிர்வாக அதிகாரி மாயன்க் பரீக் இந்த விலை உயர்வு அறிவிப்பை வெளியிட்டார். மேலும், இந்த விலை உயர்வு உடனடியாக அமலுக்கு வருவதாகவும் குறிப்பிட்டார்.

More from DriveSpark

Article Published On: Monday, March 26, 2012, 10:03 [IST]
English summary
Maruti Suzuki which had previously announced it would increase prices of its cars following increased taxes in the union budget of 2012-13, has now presented a renewed price list of its cars. The Indian carmaker has increased prices of all its models with the SX4 sedan seeing its price increase by Rs.17,000.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+