புதிதாக 500 பேரை பணியமர்த்தும் மாருதி சுஸுகி

நாட்டின் மிகப்பெரிய கார் தயாரிப்பு நிறுவனமான மாருதி சுஸுகி இந்தியா நிறுவனம் டெல்லி அருகே குர்கானிலும், மானேசரிலும் ஆலைகள் அமைத்து கார் உற்பத்தி செய்து வருகிறது.
குர்கானில், மூன்று உற்பத்தி பிரிவுகளும், மானேசரில் இரண்டு உற்பத்தி பிரிவுகளும் இருக்கின்றன. இதில், கடந்த ஆண்டு திறக்கப்பட்ட மானேசர் ஆலையின் இரண்டாவது உற்பத்தி பிரிவுக்கு புதிதாக 500 பேரை பணியமர்த்துகிறது மாருதி.
தகுதியும், திறமையும் வாய்ந்த டெக்னிசீயன் மற்றும் எஞ்சினியர்கள் புதிய ஆலைக்கு தேர்வு செய்து பணியமர்த்தப்படுவர் என்று அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. அதேவேளை, இதுதொடர்பாக இடைத்தரகர்கள் யாரையும் நம்பி ஏமாறவேண்டாம் என்றும் அந்த நிறுவனம் கூறியுள்ளது.
இந்த ஆலையில்தான் ஸ்விப்ட், ஸ்விப்ட் டிசையர் கார்கள் தயாரிக்கப்படுகின்றன. புதிய ஆட்சேர்க்கை மூலம், இந்த கார்களின் உற்பத்தி திறனை வெகுவாக கூட்டிக்கொள்ள முடியும். இதனால், இரண்டு மாடல்களுக்கும் இருக்கும் தேவையை எளிதாக நிறைவு செய்ய முடியும் என்று மாருதி கருதுகிறது.


Click it and Unblock the Notifications








