பெட்ரோல் கார் விற்பனை சரிவை தவிர்க்க ஏற்றுமதியை அதிகரிக்கும் மாருதி

பெட்ரோல் விலை உயர்வால், பெட்ரோல் கார்களின் விற்பனை கணிசமாக குறைந்துவிட்டன. இதனால், கார் நிறுவனங்கள் டீசல் கார் உற்பத்திக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து வருகின்றன. ஆனாலும், பெட்ரோல் கார் உற்பத்திக்காக பெரும் முதலீடுகளை செய்துள்ளதால், பெட்ரோல் கார் விற்பனையையும் அதிகரிக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றன.
இந்த நிலையில், பெட்ரோல் கார் விற்பனையில் ஏற்பட்டு வரும் சரிவை தவிர்க்க ஏற்றுமதியை அதிகரிக்க மாருதி முடிவு செய்துள்ளது. இதன்படி, இந்தோனேஷியாவுக்கு விரைவில் ஸ்விப்ட் ஏற்றுமதியை துவங்குகிறது மாருதி. இதைத்தொடர்நது, புதிய மார்க்கெட்டுகளில் தனது கார் மாடல்களை விற்பனைக்கு கொண்டு வரவும் திட்டமிட்டுள்ளது.
இதன்மூலம், பெட்ரோல் கார்களின் விற்பனையில் கூடுதல் வளர்ச்சியை பெற முடியும் என்று மாருதி கருதுகிறது. வரும் செப்டம்பரில் இந்தோனேஷியாவில் நடைபெறும் சர்வதேச ஆட்டோமொபைல் கண்காட்சியில் ஸ்விப்ட்டை முறைப்படி விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட உள்ளதாக மாருதி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


Click it and Unblock the Notifications








