எஸ்எக்ஸ்4 காருக்கு ரூ.80,000 தள்ளுபடி: மாருதியின் மெகா ஆஃபர்
மாருதியின் எஸ்எக்ஸ்4 செலிபரேஷன் எடிசன் காருக்கு விலையில் ரூ.80,000 தள்ளுபடி சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று முதல் 7 நாட்களுக்கு மட்டுமே கிடைக்கும் இந்த சலுகை டீசல் மாடலுக்கும் பொருந்தும்.
உள்நாட்டு மார்க்கெட்டில் ஒரு கோடி கார்கள் விற்பனை செய்த சாதனையை கொண்டாடும் விதமாக கடந்த சில மாதங்களுக்கு முன் கூடுதல் அம்சங்களுடன் எஸ்எக்ஸ்4 செலிபரேஷன் எடிசன் காரை மாருதி விற்பனைக்கு கொண்டு வந்தது.

பெட்ரோல், டீசல் மற்றும் சிஎன்ஜி மாடல்களில் இந்த கார் கிடைக்கிறது. செலிபரேஷன் எடிசன் சின்னம், கவர்ச்சியான கிராபிக்ஸ் ஸ்டிக்கர், தலையனை, தரை விரிப்புகள் என ஏராளமான கூடுதல் அம்சங்களுடன் வந்தது எஸ்எக்ஸ்4.
இந்த நிலையில், செலிபரேசன் எடிசன் எஸ்எக்ஸ்4 காரின் விலையில் ரூ.80,000 தள்ளுபடி வழங்குவதாக மாருதி அறிவித்துள்ளது. பெட்ரோல் மாடல் மட்டுமின்றி டீசல் மாடலுக்கும் இந்த சலுகை பொருந்தும் என அறிவித்து வாடிக்கையாளர்களுக்கு மகிழ்ச்சியான செய்தியை அறிவித்துள்ளது மாருதி.
இன்று முதல் 7 நாட்களுக்கு மட்டுமே இந்த தள்ளுபடி சலுகையை வாடிக்கையாளர்கள் பெற முடியும் என அந்த நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டிருக்கிறது.


Click it and Unblock the Notifications