ஒரு கோடி கார்களை விற்று இமாலய சாதனை புரிந்த மாருதி

கடந்த 1983ம் ஆண்டு மாருதி நிறுவனம் கார் உற்பத்தியை துவங்கியது. முதன்முதலாக மாருதி-800 காரை அந்த நிறுவனம் விற்பனைக்கு கொண்டு வந்தது.
இந்த காரின் மூலம் வாடிக்கையாளர்களின் மனங்கவர்ந்த நிறுவனமாக மாருதி மாறியது. இதைத்தொடர்ந்து, குறைந்த விலையில் பல புதிய மாடல்கலை அறிமுகப்படுத்தி மக்களுக்கான கார் தயாரிப்பு நிறுவனம் என்ற பெருமையை பெற்றது.
இதனால், விற்பனையிலும் அந்த நிறுவனம் தொடர்ந்து பல புதிய மைல்கற்களை எட்டியது. கார் உற்பத்தியை துவங்கி 23 ஆண்டுகள் கழித்து கடந்த 2006ம் ஆண்டு பிப்ரவரியில் 50 லட்சம் கார்கள் என்ற விற்பனை இலக்கை அந்த நிறுவம் கடந்தது.
இந்த நிலையில், 23 ஆண்டுகளில் 50 லட்சம் என்ற எண்ணிக்கையை கடந்த அந்த நிறுவனம் தற்போது வெறும் 6 ஆண்டுகளில் மேலும் 50 லட்சம் கார்களை விற்பனை செய்து தற்போது ஒரு கோடி கார் விற்பனை என்ற புதிய இலக்கை கடந்துள்ளது.
மாருதி ஆலையில் உற்பத்தி செய்யப்பட்ட ஒரு கோடி எண்ணிக்கையிலான சிவப்பு நிற ஸ்விப்ட் கார் தற்போது கோவை நகருக்கு விற்பனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக மாருதி தெரிவித்துள்ளது.


Click it and Unblock the Notifications








